சன் டி.விக்கு தலைமை நீதிபதி கண்டனம்
சென்னை:
சிறு சேரி நில ஊழல் வழக்கு தொடர்பாக தவறான செய்தியை ஒளிபரப்பியதற்காக சன் டிவிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி ஏ.பி.ஷா கடும் கண்டனம் தெரிவித்தார்.
சென்னை அருகே சிறுசேரியில் சிப்காட் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ. 200 கோடி மதிப்புள்ள நிலத்தை, சிங்கப்பூரைச் சேர்ந்தரியல் எஸ்டேட் நிறுவனத்திற்குத் தமிழக அரசு ரூ. 15 கோடிக்கு விற்றுள்ளது.இதுதொடர்பாக ரூ. 100 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளதாக கூறி திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சிறுசேரி நில ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு கடந்த கடந்த 16ம் தேதி தலைமை நீதிபதி ஏ.பி.ஷாதலைமையிலான பெஞ்ச் பரிசீலித்தது.
பின்னர் மனுவின் நகலை எதிர் மனு தாரருக்கு அனுப்புமாறு உத்தரவிட்ட தலைமை நீதிபதி, இந்த மனு விசாரணைக்கு உகந்ததாஎன்பது குறித்து டிசம்பர் 23ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என கூறி ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் ஆற்காடு வீராசாமி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதாகவும், 23ம் தேதிஇறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் சன் டிவி செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சன் டிவியில் வெளியான செய்திகுறித்து தலைமை நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதைக் கேட்டதும் தலைமை நீதிபதி கோபமடைந்தார்.
திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தைப் பார்த்து, அன்று நான் என்ன சொன்னேன்? மனுவின் நகலை எதிர்மனுதாரருக்கு அனுப்புங்கள் என்று கூறி இன்றைக்கு விசாராணையை ஒத்திவைத்தேன்.
அவ்வளவு தானே நடந்தது? அதற்குள் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டதாக திமுகவுடன் தொடர்புடைய சன் டிவியில் எப்படிசொல்லலாம்? தேவையில்லாமல் நீதிமன்றத்திற்குள் அரசியலைக் கொண்டு வராதீர்கள்.
ஊடகங்கள் செய்திகளை அதி விரைவாக சொல்வதை நான் பாராட்டுகிறேன். அதே சமயம், தவறான, பொய்யான செய்தியைஅவை பரப்பக் கூடாது. இந்த குறைந்தபட்ச செயல்பாட்டை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
திமுக சார்பான டிவி என்பதால், அரசுக்கு எதிரான அத்தனை வழக்குகளையும் தவறான கண்ணோட்டத்துடனேயே பார்க்கக்கூடாது என்று கடுமையாகக் கூறினார். இதையடுத்து சண்முக சுந்தரம் விளக்கம் அளித்தார்.
மேலும் சன் டிவி திமுகவுக்குத் தொடர்புடையதல்ல என்றும் அவர் விளக்கினார். இதைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த சிலவழக்கறிஞர்கள், தலைமை நீதிபதியை அவரது அறையில் தனியாக சந்தித்துப் பேசினர். அப்போது வேறு சிலபத்திரிக்கைகளிலும் சன் டிவியில் சொன்னது போலவே செய்திகள் வந்திருப்பதாக கூறினர்.












Click it and Unblock the Notifications