திண்டிவனம் ராமமூர்த்தி மீது வாசன் கோஷ்டி முட்டை வீச்சு: சட்டையைப் பிடித்து கலாட்டா
வேலூர்:
வேலூரில் திண்டிவனம் ராமமூர்த்தி கலந்து கொண்ட கூட்டத்தில், ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டு,ராமமூர்த்தி மீது முட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் ராமமூர்த்தி தலைமையிலான அதிருப்தி காங்கிரஸ் பிரிவினர் வேலூரில் செயல் வீரர்கள் கூட்டத்தைக் கூட்டினர்.இதில் திண்டிவனம் கலந்து கொண்டு பேசினார்.இந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று ஏற்கனவே ஜி.கே.வாசன் கோஷ்டியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால்எதிர்ப்பைப் பொருட்படுத்தாதது திண்டிவனம் கோஷ்டியினர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
திட்டமிட்டபடி கூட்டம் தொடங்கியது. அப்போது 50 பேர் கொண்ட வாசன் கோஷ்டியினர் கூட்டம் நடந்த ஹோட்டலுக்குஆவேசமாக வந்தனர். திண்டிவனம் ராமமூர்த்தியை நோக்கி சால்வைகளுடன் சென்றனர்.
கோஷ்டி மாறி தனக்கு சால்வை அணிவிக்கத் தான் வந்துள்ளார்கள் என நினைத்து திண்டிவனம் ராமமூர்த்தி மகிழ்ச்சியுடன்அவர்களைப் பார்த்துச் சிரித்தாார். பதிலுக்கு சிரித்தபடியே திண்டிவனத்தை நெருங்கிய வாசன் ஆதரவாளர்கள், திடீரென அவரதுசட்டையைப் பிடித்தனர்.
பின்னர் அவரை ஒருமையில் திட்டினர். திண்டிவனம் ராமமூர்த்தி, முன்னாள் எம்.பி. தண்டாயுதபாணி ஆகியோர் மீது அழுகியமுட்டைகளையும் வீசினர். இதனால் இருவர் முகத்திலும் முட்டைகள் தெரித்து ஒழுகியன.
இச் சம்பவத்தால் நிலை குலைந்து போன திண்டிவனத்தாரையும், தண்டாயுதபாணியையும் அவர்களது ஆதரவாளர்கள் கடும்பிரயத்தனம் செய்து மீட்டனர்.
அப்போது வாசன் ஆதரவாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது.
பின்னர் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து வாசன் கோஷ்டியினரை அங்கிருந்துஅப்புறப்படுத்தினர். இந்த சலசலப்பால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
பின்னர் கூட்டத்தில் திண்டிவனம் ராமமூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை படு கேவலமாக உள்ளது.இங்கே என்ன நடந்தது என்பதை இங்கே கூடியுள்ள பெரியவர்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளீர்கள். யாருடைய தூண்டுதலின்பேரில் இது நடந்திருக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும்.
பூனையைப் பார்த்துப் பயப்படும் எலியின் கதையாக காங்கிரஸின் நிலை இன்று உள்ளது. திமுகவினரைக் கேட்டு விட்டுத்தான்எதையுமே முடிவு செய்கிறார்கள் தமிழக காங்கிரஸ் தலைமையும், அகில இந்தியத் தலைமையும்.
முன்பெல்லாம் தமிழகம் முழுக்க காங்கிரஸ் கட்சிக்குப் பிரதிநிதித்துவம் இருந்தது. வன்னியர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.ஆனால் இன்று அப்படி இல்லை. திமுகவிடம் கட்சியை அடகு வைத்து விட்டார்கள்.
ஆனால் வரும் சட்டசபைத் தேர்தலில் இந்த நிலை வர விட மாட்டோம். எங்களது உரிமைகளைப் போராடிப் பெறுவோம். விடமாட்டோம் என்றார் திண்டிவனம் ராமமூர்த்தி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications