போலிகளை சேர்த்தவர்களுக்கு என்ன தண்டனை?
சென்னை:
போலி வாக்காளர்களைச் சேர்த்த குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர்களுக்கு 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறை தண்டனைகிடைக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 13 லட்சம் போலி வாக்காளர்களைச் சேர்க்க ஒட்டுமொத்தமாக மனு கொடுத்தவர்கள் மீது வழக்குத் தொடரதேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனு கொடுத்தவர்கள் மீது ஆங்காங்கே வழக்கு தொடரப்பட்டுவருகிறது.இதில் பெரும்பாலும் அதிமுகவினர்தான் சிக்கியுள்ளனர். இருப்பினும் திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மற்றபிரமுகர்கள் மீதும் வழக்குகள் பாய்ந்து வருகின்றன.
அமைச்சர்கள் சி.வி.சண்முகம், பி.சி.ராமசாமி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏராளமானஅதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.
இதேபோல திமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், பாஜகவைச் சேர்ந்த பிரமுகர்களும் வழக்குகளில்சிக்கியுள்ளனர்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் என்ன தண்டனை கிடைக்கும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம்கேட்டபோது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 31ன்படி, போலியான வாக்காளர்களைச் சேர்க்க முயல்வது குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கும். அதிமுக, திமுக, பாமக, மதிமுக, பாஜக ஆகியகட்சிகளைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் போலி வாக்காளர்களை சேர்க்க மனு கொடுத்துள்ளனர்.
வழக்குப் பதிவு செய்வது வரும் 26ம் தேதிக்குள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கிறோம். போலி வாக்காளர்கள் இல்லாதபட்டியலை வெளியிடுவதே எங்களது முக்கிய நோக்கம். மேலும், போலியான வாக்காளர்களை இனிமேல் யாரும் சேர்க்கமுன்வரக் கூடாது என்பதற்கு இது ஒரு எச்சரிக்கையாகவும் அமையும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications