கிறிஸ்மஸ்: பர்னாலா, ஜெயலலிதா, கருணாநிதி வாழ்த்து
சென்னை:
உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக கவர்னர் பர்னாலா, முதலமைச்சர்ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
கவர்னர் பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியாவது:கிறிஸ்தவ சகோதரர்களுக்கு எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் வாழ்வில்சந்தோஷமும், வளமும் பொங்க வாழ்த்துகிறேன். ஏசு கிறிஸ்து மனித நேயம், அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றை போதித்தார்.அமைதி, சகோதரத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவற்றை கடைபிடிப்பதில் நம்மை அற்பணித்து கொள்வோம் என்றுகூறியுள்ளார்.
முதலமைச்சர் தமது வாழ்த்து செய்தியில் இயேசு பிரான் பிறந்த நாளை கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும்எனது இதயம் கனிந்த கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அருள் அவதாரமான கிறிஸ்து பிறந்த நாளில்அகிலம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் திகழ வாழ்த்துவதோடு, என் அன்புக்குரிய கிறிஸ்துவப் பெருமக்கள்அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் தமது வாழ்த்து செய்தியில் கிறிஸ்துமஸ் திருநாள் உலகமெங்கும் மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும்கொண்டாடப்படுகிறது. அநீதியையும், கொடுங்கோன்மையையும் கண்டு அஞ்சி ஒதுங்கிடாமல் அவற்றை புன்முறுவலுடன் எதிர்கொண்டு அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, போன்ற உயரிய பண்புகளை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் ஏசு பிரான்.
அவரது வாழ்வும், வாழ்வின் அரிய உண்மைகளும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் இன்னமும் வழிகாட்டும் செய்திகளாகவிளங்கி ஏழை, எளியோர் நலிந்த பிரிவினர் உள்பட அனைவரது உள்ளங்களையும், உணர்வுகளையும் வழிப்படுத்திவருகின்றன.
எனவே ஒவ்வொருவர் வாழ்விலும் வளமும் நலமும் செழித்திட என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications