ஒண்டிக்கு ஒண்டி சான்ஸே இல்லை! விஜயகாந்த்துக்கு கண்ணப்பன் பதில்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித் தனியாக போட்டியிடுவதற்கான வாய்ப்பே இல்லை. விஜயகாந்த்தின்கோரிக்கை நடைமுறைக்கு ஒத்துவராதது என்று மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவர் ராஜ. கண்ணப்பன் கூறியுள்ளார்.
விஜயகாந்த்துக்கு முன்பாக, போன சட்டசபைத் தேர்தலின் போது கட்சி தொடங்கியவர் ராஜ. கண்ணப்பன். இந்தத் தேர்தல் வரைதாக்குப் பிடித்து வரும் அவர், வரப் போகும் சட்டசபைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் சீட் பெற திட்டமிட்டுள்ளார்.இந் நிலையில், புதுக் கட்சி ஆரம்பித்துள்ள விஜயகாந்த், நான் தனியாகப் போட்டியிடப் போகிறேன், நீங்களும் தனித்துப்போட்டியிடத் தயாரா என்று திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சவால் விட்டு வருகிறார். அவருக்கு ராஜ. கண்ணப்பன் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கண்ணப்பன் பேசுகையில், நடைமுறைக்கு ஒத்துவராத கோரிக்கையை வைக்கிறார்விஜயகாந்த். வெறும் சவடால் பேர்வழி அவர். தமிழகத்தில் தேர்தல் என்றாலே கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்பதுகாலம் காலமாக இருந்து வருவது.
அண்ணா, எம்.ஜி.ஆர். காலம் முதல் இன்று வரை அந்த நடைமுறை தான் இருந்து வருகிறது. இது கூட புரியாமல், தெரியாமல்பேசி வருகிறார் விஜயகாந்த். தமிழகத்தைப் பொருத்த வரை 60 சதவீத ஆதரவு உள்ள கட்சி தான் ஆட்சியைப் பிடிக்க முடியும்.அந்த அளவுக்கு ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை.
எனவே தான் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறார்கள். கூட்டணியில் பெரிய கட்சி எதுவோ அது ஆட்சிக் கட்டிலில்அமருகிறது. இதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கும் விஜயகாந்த் கட்சி அமைத்து, தனித்துப் போட்டியிடத்தயாரா என்று முழங்கி வருவது சிரிப்பாக உள்ளது.
எதற்கும் உதவாத பேச்சை அவர் பேசி வருகிறார். மக்கள் இதை நிராகரிப்பார்கள். அவரால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை, மாறாக அவர் தான் கடுமையாகப் பாதிக்கப்படப் போகிறார்.
தமிழகத்தில் 185 தொகுதிகளில் தலா 15,000 முதல் 17,000 ஓட்டுக்கள் வரை எங்களுக்கு உள்ளது. இந்த ஓட்டுக்களை திமுககூட்டணிக்காக செலுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த ஓட்டுக்களை ஒருங்கிணைக்க விரைவில் கூட்டங்கள்நடத்தவுள்ளோம் என்றார் கண்ணப்பன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications