எம்பி பழனிச்சாமி குறித்து தவறான செய்தி: தவறுக்கு வருந்துகிறோம்
சென்னை:
டெல்லியைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிறுவனத்திடம் ரூ. 75 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் கரூர்எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு டெல்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது என்று நாம் கடந்த 13ம் தேதி வெளியிட்டசெய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நபர், இப்போதைய கரூர் திமுக எம்பியான கே.சி.பழனிச்சாமி அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இது தொடர்பாக தற்போதைய கரூர் திமுக எம்பியான கே.சி.பழனிச்சாமி அனுப்பியுள்ள விளக்கத்தில்,முன்னாள் திமுக எம்பியின் ரூ. 75 கோடி மோசடி என்ற அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ள கே.சி..பழனிச்சாமி நான் அல்ல. நான்முன்னாள் எம்பியும் அல்ல. 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் தான் முதன் முதலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டுஎம்பியானேன். அதற்கு முன் நான் எம்பியாக இருந்ததில்லை.
கே.சி.பழனிச்சாமி என்ற பெயரில் இன்னொரு முன்னாள் எம்பி உள்ளார். அவர் அதிமுகவைச் சேர்ந்தவர். திருச்செங்கோடு தொகுதிஎம்பியாக இருந்தவர்.
இந் நிலையில் கரூர் முன்னாள் எம்பி என்று என்னைத் தவறாகக் குறிப்பிட்டு நான் டெல்லியைச் சேர்ந்த டேட்டா அக்ஸெஸ்நிறுவனத்திடம் ரூ. 75 கோடி மோசடி செய்ததாக செய்தி வெளியிட்டுள்ளீர்கள்.
நீங்கள் குறிப்பிடும் நபர் நான் அல்ல, தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எனக்கும் அந்த மோசடிக்கும்எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் பழனிச்சாமி.
தவறான தொகுதியின் பெயர், கட்சியின் பெயர் காரணமாக இப்போதைய எம்பியான திரு. கே.சி. பழனிச்சாமி குறித்து மிகத்தவறான செய்தி வெளியாகிவிட்டது. இதற்காக வருந்துகிறோம்.
நம்மைத் தொடர்பு கொண்டு தனது தரப்பின் நியாயத்தைத் தெரிவித்து, நம் தவறைத் திருத்திய திரு.பழனிச்சாமிக்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறோம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications