லஞ்சம்: 6 பாஜக எம்பிக்கள் உள்பட 11 பேர் பதவி பறிப்பு: தமிழக பாணியில் நடவடிக்கை
சென்னை:
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய 6 பாஜக எம்பிக்கள் உள்பட 11 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்த சிபி சிங், அன்னாசாகிப் பாட்டீல், மகாஜன், சுரேஷ் சந்தல், பிரதீப் காந்தி ஆகிய மக்களவை உறுப்பினர்களும்மாநிலங்களவை பாஜக எம்பியான சத்ரபால் சிங்கும்,பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களான நரேந்திரகுமார், லால்சந்திரா, ராஜாராம் பால், காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த ராம்சேவக் சிங், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் ஆகியோர் நாடாளுமன்றத்தில் இருந்துவெளியேற்றப்பட்டனர்.
இவர்களைப் பதவி நீக்கம் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவையிலும், காங்கிரஸ் உறுப்பினர் கரண்சிங் மாநிலங்களவையிலும் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதுவரை எம்பிக்கள் லஞ்சம் வாங்கிய விஷயத்தில் தீவிரமான நிலையை எடுத்த பாஜக திடீரென பல்டியடித்து இவர்களை பதவிநீக்கம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களே எப்படி பதவி நீக்கம்செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பி பாஜக விவாதம் செய்தது.
ஆனால், இவர்களை பதவி நீக்கம் செய்ய குரல் வாக்கெடுப்பு நடத்த மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி முடிவு செய்தார்.இதையடுத்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் பாஜக வெளிநடப்பு செய்தது.
இதையடுத்து 10 எம்பிக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
லஞ்ச ஊழல் விஷயத்தில் பாஜகவின் உண்மையான நிறம் வெளிப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மாட்டிக்கொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாஜகவினர் தான் என்பதால் அவர்களை பதவி நீக்கம் செய்வதை பாஜகவிரும்பவில்லை என மத்திய அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர்.
அதே போல மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் பாஜக எம்பி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அங்கும் தனது எம்பிநீக்கப்படுவதை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தது.
தமிழக சட்ட சபையில் 10 திமுக எம்.எல்.ஏக்கள் கடந்த 1986ம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட முறையைப் பயன்படுத்தியேதற்போது 11 எம்.பிக்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1986ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது திமுக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தது. அப்போது சபாநாயகராகஇருந்தவர் பி.எச்.பாண்டியன். இந்தி எதிர்ப்புப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த திமுக, இந்தித் திணிப்பை எதிர்த்து, அரசியல் சட்டநகலை தீவைத்துக் கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டது.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏக்கள் அரசியல் சட்ட நகலை தீவைத்துக் கொளுத்தினர்.இதையடுத்து அவர்களை எம்.எல்.ஏ. பதவியிலிருந்து நீக்கி சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அதிரடித் தீர்ப்பை அளித்தார்.
இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் நிான் வானளாவிய அதிகாரம் படைத்தவன், என்னை யாரும்கேள்வி கேட்க டியாது என்று ழங்கினார் பாண்டியன்.
அவரது இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாகஉயர் நீதிமன்றம், பாண்டியனுக்கு அனுப்பிய நோட்டீஸைப் பெற அவர் மறுத்து விட்டார். மேலும், நீதிமன்றத்திற்கு சட்டசபைவிவகாரத்தில் தலையிட அதிகாரம் இல்லை. சட்டசபையே அதிக அதிகாரம் படைத்தது என்று அவர் கூறினார்.
பின்னர் பாண்டியனின் தீர்ப்பை உறுதிப்படுத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்திலும் இத்தீர்ப்புஉறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 10 திக எம்.எல்.ஏக்களின் பதவி பறிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த முன்னோடிச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே தற்போது லஞ்சம் வாங்கிய 11 எம்.பிக்கள் பதவி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர். தங்களது பதவி பறிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றாலும் அது எடுபடாது என்றே சட்ட வல்லுனர்கள்தெரிவிக்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications