இலங்கையில் தமிழ் எம்பி பரராஜசிங்கம் சுட்டுக் கொலை
கொழும்பு:
இலங்கையில் தமிழ் எம்பி ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். புலிகள் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டணி எம்பியானஇவரை கருணா கும்பல் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
71 வயதான பரராஜசிங்கம் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி நள்ளிரவு பிரார்த்தனையில் பங்கேற்க மட்டக்களப்பில் உள்ள புனிதமைக்கேல் சர்ச்சுக்கு சென்றார். அவருடன் அவரது மனைவியும் சென்றிருந்தார்.அவர்கள் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்த போது சிலர் சர்ச்சுக்குள் நுழைந்து ஜோசப் பரராஜசிங்கத்தையும் அவரதுமனைவியையும் நோக்கி சரமாரியாக சுட்டனர். எம்பியின் பாதுகாப்புக்கு சென்ற பாதுகாப்பு படை வீரர்களும் திருப்பி சுட்டனர்.இதையடுத்து தேவாலயத்தில் சுப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் பரராஜசிங்கம் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. எம்பியின் மனைவி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இத் தாக்குதலில்மேலும் 7 பேரும் காயமடைந்தனர்.
கடந்த 1990ம் ஆண்டு முதல் பரராஜசிங்கம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
கருணா கோஷ்டியினர் தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications