இல்லாத கட்சிக்கு 2 கோஷ்டி: அப்சட்டான லாலு
சென்னை:
சென்னைக்கு வந்த மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு, தமிழக ராஷ்டிரிய ஜனதாதளத்தின் 2 கோஷ்டியினர்தனித் தனியாக வரவேற்பு கொடுத்ததால் லாலு நொந்து போய் கடுப்பானார்.
தேசிய அளவில் உள்ள பல கட்சிகள் தமிழகத்திலும் உள்ளன. காங்கிரஸ், ஜனதாதளம், கம்யூனிஸ்டுகள், ராஷ்டிரிய ஜனதாதளம்என இந்த வரிசை நீளம். இதில் உயிருடன் இருப்பது காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும் மட்டும் தான்.இந்தக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல் அகில உலகப் புகழ் பெற்றது. பெரிய கட்சி, ரொம்ப காலமாக இருக்கும்கட்சியில் கோஷ்டிகள் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் வெறும் நிர்வாகிகள் மட்டுமே உள்ள ராஷ்டிரிய ஜனததாளம்,ஜனதாதளம் போன்ற கட்சிகளிலும் கோஷ்டிப் பூசல் கொடி கட்டிப் பறப்பது தான் இங்கே மேட்டர்!
இந்த நிலையில், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் சென்னைக்குவந்தார். சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவருக்குவிமான நிலையத்தில் ராஷ்டிரிய ஜனதாதள தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
எப்படி? இரண்டு கோஷ்டிகளாக வந்து, கேசவன் என்பவரது தலைமையில் ஒரு அணியும், ராமலிங்கம் என்பவரது தலைமையில்இன்னொரு கோஷ்டியும் திரளான தொண்டர்களுடன் திரண்டு வந்து லாலுவை வரவேற்றனர்.
இந்த பலத்த வரவேற்பில் பயந்து போன லாலு, போடப்பட்ட மாலைகளை வரவழைத்துக் கொண்ட புன்னகையுடனும், லேசானகடுப்புடனும் ஏற்றுக் கொண்டு வேகம் வேகமாக நகர்ந்து போய் விட்டார். முன்னதாக ரயில்பெட்டித் தொழிற்சாலை விழாவில்கலந்து கொண்ட லாலு பேச்சை தொடங்கும் முன்பு வணக்கம் என தமிழில் ஆரம்பித்தார்.
பின்னர் டக்கென்று இந்திக்குத் தாவி விட்டார். தனது பேச்சை முழுவதுமாக இந்தியிலேயே பேசி முடித்தார். அவரது பேச்சைஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ யாரும் மொழிபெயர்க்கவில்லை.
இதனால் லாலு என்ன பேசுகிறார் என்பதையே புரிந்து கொள்ள முடியாமல் விழாவுக்கு வந்திருந்த பலர் அவரை வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications