திருப்பூரில் நகை கடை அதிபர் பட்டப் பகலில் கொலை: 2 கிலோ நகைகள் கொள்ளை
திருப்பூர்:
கோவை மாவட்டம் திருப்பூர் அருகே நகைக் கடை உரிமையாளரை கத்தியால் குத்திப் படுகொலை செய்து விட்டு 2 கிலோ தங்கநகைகளை ஒரு கும்பல் திருடிச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள போயம்பாளையம் மும்மூர்த்தி நகரில் நகைக் கடை வைத்திருந்தவர் தீனதயாளன் (வயது 25). சிலமாதங்களுக்கு முன்பு தான் இந்த நகைக் கடை திறக்கப்பட்டது. இங்கு ஆனந்தி என்பவர் மட்டும் பணியாளராக உள்ளார்.இக்கடைக்கு 2 நாட்களுக்கு முன்பு 3 பேர் வந்து நகை ஆர்டர் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 2 கிராம் மோதிரத்திற்குஅவர்கள் ஆர்டர் கொடுத்து விட்டு போகும்போது தீனதயாளனின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டனர். ரூ. 100 மட்டும்முன்பணம் கொடுத்த அவர்களில் ஒருவன் தனது பெயரை பாலு என்று கூறி ரசீதில் கையெழுத்துப் போட்டுச் சென்றான்.
இதையடுத்து சனிக்கிழமை காலை அதே மூன்று பேரும் காலை 9 மணியளவில் வந்தனர். ஞாயிற்றுக்கிழமை வருவதாக கூறிவிட்டு இப்போதே வந்து விட்டீர்களே என்று அவர்களிடம் கேட்டுள்ளார் தீனதயாளன்.
பின்னர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த மோதிரத்தை எடுப்பதற்காக எழுந்துள்ளார். அவரது பின்னாலேயே 3 பேரில் ஒருவன்எழுந்து சென்றான். நகைகள் வைக்கப்பட்டிருந்த பீரோ இருந்த அறைக்குள் தீனதயாளன் சென்றதும், அந்த நபர் அவருடன்உள்ளே சென்று கதவைப் பூட்டிக் கொண்டான்.
நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வராததால், சந்தேகமடைந்த ஊழியர் ஆனந்தி, எழுந்து சென்று பார்க்க முயன்றுள்ளார்.அப்போது மற்ற இருவரும் ஆனந்தியை கத்தியைக் காட்டி மிரட்டி அமர வைத்துள்ளனர்.
தீனதயாளனுடன் உள்ளே சென்றவன், அவரை கத்தியைக் காட்டி மிரட்டி அங்கிருந்த நகைகளைத் திருட முயன்றான். ஆனால்தீனதயாளன் கடுமையாகப் போராடி அதைத் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்தத் திருடன், தீனதயாளனைகத்தியால் சரமாரியாகக் குத்தினான். இதில் தீனதயாளன் பரிதாபமாக இறந்து போனார்.
பின்னர் நகைகளை திருடிக் கொண்டு வெளியே வந்த திருடன், மற்ற இருவருடனும் சேர்ந்து வேகமாக வெளியேறி விட்டான்.தீனதயாளன் என்ன ஆனார் என்பதைப் பார்த்த ஆனந்தி அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்துகூச்சலிட்டார்.
தகவல் அறிந்து வந்த போலீஸார் நகைக் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். திருடர்கள் திருப்பூர் நோக்கி தப்பிச் சென்றதுவிசாரணையில் தெரிய வந்தது. கடையிலிருந்து 2 கிலோ நகைகள் வரை திருடு போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
படுகொலை செய்யப்பட்ட தீனதயாளனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தந்தை, தாய் மற்றும் நான்கு சகோதரிகள்அவருக்கு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications