வீடுகளை விட்டு வெளியேறிய கடலோர மக்கள்
சென்னை:
கடந்த ஆண்டு வந்ததைப் போல இந்த முறையும் சுனாமி வந்து விடுமோ என்ற பீதியில் சென்னை நகரின் கடலோரப் பகுதிகளில்வசிக்கும் ஏராளமானோர் இன்று தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே நாளில் சுனாமி பேரலைகள் நடத்திய பெரும் தாக்குதலில், தமிழக கடலோரப் பகுதிகள் பெரும் சீரழிவைசந்தித்தன. சென்னை நகரும் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. 200 பேருக்கும் மேல் இதில் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர்வீடுகளை இழந்தனர்.வீடு, வாசல், உடமைகள், சொந்தங்களை இழந்த சென்னை கடலோரப் பகுதிவாசிகள் கடந்த ஆண்டு நடந்த அந்த துயரச்சம்பவத்தை இன்னும் மறக்கவில்லை. இதற்கிடையே இன்றும் சுனாமி வரும் என பரவிய புரளியால் நேற்று காலை முதலேசீனிவாசபுரம், திருவான்மியூர், கொட்டிவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
கடலுக்கு அருகில் வசிக்கும் பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று விட்டனர்.
மேலும் பலர் கடந்த ஆண்டு நடந்த துயரச் சம்பவத்தை மனதில் அசைபோட்டபடி கடற்கரை மணலில் கூட்டம் கூட்டமாகஅமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
பெரும்பாலான மீனவர்கள் இன்று கடலுக்குப் போகாமல் படகுகளை நிறுத்தி விட்டு சோகமாகவும், கடந்த ஆண்டின் கொடியநினைவுகளுடனும் கடற்கரை மணல் வெளியில் உலாவிக் கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications