மன்னார்குடி நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சரண்டர்
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் பெரியகுடி சிவன் கோவிலில் நவரத்தினக் கற்களை திருடியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மன்னார்குடிநீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சரணடைந்து முன் ஜாமீன் பெற்றார்.
மன்னார்குடி அருகே உள்ள பெரியகுடி அகஸ்தீஸ்வரர் கோவிலில், சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த நவரத்தின கற்களைஜெயேந்திரர் எடுத்துச் சென்று விட்டதாக அவர் மீது மன்னார்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்ற கிருஷ்ணன் புகார் கொடுத்துள்ளார்.இந்தப் புகாரின் பேரில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்துசென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய ஜெயேந்திரர் உள்ளிட்ட 8 பேரும் முன் ஜாமீன் கோரினர்.
அவர்களது கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், மன்னார்குடி நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் பெறலாம் எனஅறிவித்தது.
இதையடுத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்ரமணியன், ராமச்சந்திரன், சந்திரசேகர், வெங்கடராஜுலு, முத்து குருக்கள்,சேதுராமன், சோமசுந்தர குருக்கள்
ஆகியோர் கடந்த 22ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் பெற்றனர்.
லிக்னிசந்த் என்பவர் 23ம் தேதி சரணடைந்து முன் ஜாமீன் பெற்றார்.
இந் நிலையில் ஜெயேந்திரர் இன்று காலை மன்னார்குடிக்கு வந்தார். நேராக நீதிமன்றம் சென்ற அவர் நீதிபதி முரளிதரன்முன்னிலையில் சரணடைந்தார். பின்னர் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டபடி ரொக்க ஜாமீன் மற்றும் இரு நபர் ஜாமீனை செலுத்தியஜெயேந்திரர் முன் ஜாமீன் உத்தரவைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து வடவூர் சென்றார்.
அங்குள்ள வேத பாடசாலையைப் பார்வையிட்ட ஜெயேந்திரர் பின்னர் நீடாமங்கலம் வழியாக கலவையில் உள்ள சங்கரமடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications