கருணாநிதி கூட்டம்: ராமதாஸ் புறக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நிவாரணப் பணிகள் பெறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 48 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக போராட்டம்நடத்துவது குறித்து முடிவெடுக்க திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின்தலைவர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்தினர். இக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்கவில்லை.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் மற்றும் வியாசர்பாடி ஆகிய இடங்களில் வெள்ள நிவாரணம் பெறக் காத்திருந்த பொது மக்களிடையேஏற்பட்ட நெரிசலில் 48 பேர் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியப் போக்கே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

அரசைக் கண்டித்து நேற்று சென்னையில் பொதுக் கூட்டமும் நடந்தது.

இந் நிலையில் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்ய கருணாநிதி தலைமையில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள்இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்தியகம்யூனிஸ்ட் சார்பில் மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்றைய பொதுக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை, இன்றைய கூட்டத்திற்கும் வரவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

30ம் தேதி ஆர்ப்பாட்டம்:

இந் நிலையில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு உடனடியாக அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைக்கவேண்டும் என்று கோரி வரும் 30ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என திமுக கூட்டணி முடிவுசெய்துள்ளது.

வதந்தி: திமுக கவுன்சிலருக்கு ஜாமீன்

இதற்கிடையே எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரணக் கூட்ட நெரிசல் பலி தொடர்பாக கைது செய்யப்பட்ட சென்னைமாநகராட்சி திமுக கவுன்சிலர் தனசேகரனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

நெரிசல் ஏற்பட்டு 42 பேர் பலியானதற்கு, திமுகவினர் பரப்பிய வதந்தியே காரணம் என முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியிருந்தார். இந் நிலையில் வதந்தி பரப்பியதாக திமுக கவுன்சிலர் தனசேகரன் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி தனசேகரன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி செல்வக்குமார், தனசேகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மறு உத்தரவு வரும் வரை தனசேகரன் நாகர்கோவிலில் தங்கியிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+