ராஜபக்ஷே வருகை: பிரதமர், ஜெவுடன் சந்திப்பு
டெல்லி:
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நாளை (செவ்வாய்க்கிழமை) இந்தியா வருகிறார்.
அதிபராகப் பதவியேற்ற பின் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது. நான்கு நாள் பயணமாக இந்தியா வரும்அவர் விடுதலைப் புலிகள் விவகாரம், அமைதிப் பேச்சு குறித்து ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங்குடன்ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து சென்னை வரும் ராஜபக்ஷே முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
திருப்பி அனுப்பப்பட்ட அமைச்சர்:
இதற்கிடையே காலாவதியான விசாவுடன் இந்தியாவுக்கு வந்த இலங்கை அமைச்சரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில்அதிகாரிகள் தடுத்து நிறுத்தி இலங்கைக்கே திருப்பி அனுப்பினர்.
இலங்கை அரசில் மறுவாழ்வுத் துறை அமைச்சராக இருப்பவர் அமீர் அலி. இவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்குவருவதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கு அவரது விசாவை அதிகாரிகள் பரிசோதித்தனர். ஆனால் அவர்வைத்திருந்த விசா கடந்த 21ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அலியை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறிய அதிகாரிகள் இலங்கைக்கே திருப்பி அனுப்பிவிட்டனர். இருப்பினும் அமீருடன் வந்த ரிஷாத் பக்ருதீன் என்பவர் சரியான விசா வைத்திருந்ததால் அவரை மட்டும்அதிகாரிகள் இந்தியாவுக்குள் சுற்றுப் பயணம் செய்ய அனுமதித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications