ஏ.சி.எஸ். மனைவி, மகன் கோர்ட்டில் சரண்
சென்னை:
புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் மனைவி, மகன், மைத்துனர் உள்ளிட்ட 4 பேர் பூந்தமல்லி நீதிமன்றத்தில்சரணடைந்து முன் ஜாமீன் பெற்றனர்.
சென்னை மதுரவாயல் எம்.ஜி.ஆர். நிகர் நிலைப் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் வெள்ளத்தில்தத்தளித்தபோது அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம், அவரதுமனைவி லலிதா லட்சுமி, மகன் அருண்குமார், மைத்துனர் ரவிக்குமார், கல்லூரியின் இயக்குனர் வெங்கடாச்சாரி ஆகியோர் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதையடுத்து தலைமறைவான இவர்களில் சண்முகம் தவிர்த்து மற்றவர்கள் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 15 நாட்களுக்குள் பூந்தமல்லி நீதிமன்றத்தில்சரணடைந்து முன் ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டது.
இதையடுத்து நான்கு பேரும் பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்திற்கு திங்கள்கிழமை மாலை வந்தனர். நீதிபதி ரவி முன்னிலையில்அவர்கள் சரணடைந்தனர்.
இதையடுத்து ரூ. 5,000 ரொக்க ஜாமீன் மற்றும் அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனில் அனைவரையும் விடுவித்து நீதிபதிஉத்தரவிட்டார்.
ஏ.சி.சண்முகம் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார்.
கட்டடங்களை இடிக்க தடை இல்லை:
இதற்கிடையே சென்னை மதுரவாயல் பகுதியில், நகராட்சி அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள சில கட்டடங்களை இடிக்கதடை ஏதும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மதுரவாயலில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து சுமார் ஆறரை ஏக்கர் நிலப் பரப்பில் சண்முகத்திற்குச் சொந்தமான எம்.ஜி.ஆர்.நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள பல கட்டடங்கள் கூவம் ஆற்றை ஆக்கிரமித்துக்கட்டப்பட்டுள்ளதால் அவற்றை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் இடித்து வருகிறது.
இந்த நிலையில், நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் இடிக்கப் போவதாக மதுரவாயல் நகராட்சி,பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து நிர்வாகம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனபாலன், இதே பிரச்சினையில் ஏற்கனவே ஒரு பொது நல மனு டிவிஷன் பெஞ்ச்சில்விசாரணையில் உள்ளது. எனவே இந்த வழக்கையும் அதே டிவிஷன் பெஞ்ச்சுக்கு அனுப்புகிறேன்.
அதேசமயம், நகராட்சியின் அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள அப்துல் கலாம் பிளாக், அன்னை தெரசா பிளாக், ராமானுஜம்பிளாக் ஆகியவற்றை இடிக்க தடை ஏதும் இல்லை. ஆனால் அறிஞர் அண்ணா பெயரில் அமைந்துள்ள கட்டடத்திற்கு சிலஅனுமதிகள் பெறப்பட்டுள்ளன. எனவே இந்த வழக்கு முடியும் வரை அந்த கட்டடத்தை மட்டும் இடிக்கக் கூடாது என்று நீதிபதிஅறிவித்தார்.
உயர்நீதிமன்றத்தின் இந்தப் புதிய உத்தரவின் மூலம், பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான கட்டடங்கள் இடித்துத் தள்ளப்படும்நிலை ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications