நாறாதீங்க: காங்கிரஸாருக்கு வாசன் அறிவுரை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ்தலைவர் ஜி.கே.வாசன் கோரியுள்ளார்.

தமிழக காங்கிரஸில் சமீப காலமாக கோஷ்டிப் பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. வாசன் கோஷ்டியினரும், இளங்கோவன்கோஷ்டியினரும் இதுவரை மோதிக் கொண்டு இருந்தனர். இப்போது திண்டிவனத்தார் கோஷ்டி என்ற புது கோஷ்டி உருவாகிஅதுவும் படு தீவிரமாக களத்தில் குதித்துள்ளது.

மேலும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுபிரசாத் தனியாக கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் மத்திய காங்கிரஸ்பார்வையாளர்கள் முன்னிலையிலேயே விஷ்ணு கோஷ்டியும் பிற கோஷ்டிகளும் மோதிக் கொண்டன.

இதுதவிர சென்னையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரை, இன்னொரு கோஷ்டியினர் வீடு புகுந்து தாக்குதல்நடத்தினர். பல்வேறு கோஷ்டிகள் இப்படி நடத்தும் பகிரங்க மோதலால் காங்கிரஸ் கட்சி கலகலத்துப் போய்க் கிடக்கிறது.

இதையடுத்து விஷ்ணுவிடம் இருந்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியைப் பறிக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.அவருக்குப் பதிலாக நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கை தலைவராக்க கட்சி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே திண்டிவனம் ராமமூர்த்தி மேற்கொண்டுள்ள திமுக எதிர்ப்பு நிலையால் வாசன் கோஷ்டியினர் கடுப்படைந்துசமீபத்தில் திண்டிவனத்தின் மீது முட்டை வீசித் தாக்கினர். அவரது சட்டையைப் பிடித்து உலுக்கும் அளவுக்கு கோஷ்டிப் பூசல்முற்றிப் போனது.

இந் நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சுனாமி நினைவு தினத்தையொட்டி நடந்த இரங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவாசன், இளைஞர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸாருக்கு பல அறிவுரைகளை வழங்கினார்.

அவர் பேசுகையில், சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகிறது. காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஏராளமான பணிகள் உள்ளன.அதைவிடுத்து நமக்குள் மோதிக் கொள்வது தவறானது. அனைவரும் கருத்தொற்றுமையுடன், ஒன்றுபட்டு நின்றால்தான் தேர்தலைவெற்றிகரமாக சந்திக்க முடியும், சாதிக்க முடியும்.

இளைஞர் காங்கிரஸாராக இருந்தாலும் சரி, மற்ற பிரிவினராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் மோதலைத் தவிர்த்து,ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அன்னை சோனியாவின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு கட்சியைப் பலப்படுத்தவேண்டும்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் முழுமையான அளவில் நிவாரண உதவிகள் போய்ச் சேரவில்லை. அரசியல்காழ்ப்புணர்ச்சியுடன் இந்தப் பிரச்சினையை அரசு அணுகக் கூடாது என்றார் வாசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+