ஜெயேந்திரருக்கு எதிராக திக போரட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரருக்கு எதிராக தமிழகம் முழுவதும் திராவிட கழகத்தின் சார்பில் போராட்டம்நடைபெற்றது.

நவரத்தின கற்கள் திருட்டு வழக்கு தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மன்னார்குடி முதலாவது ஜூடிசியல்நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார். அவர் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் திகவினர்ஊர்வலமாக வந்தனர். சங்கர மடத்தில் இருந்து சங்கராச்சாரியார்களை பதவி நீக்கம் செய்யக் கோரி கோஷம் எழுப்பினர்.

மன்னார்குடி பெரியார் சாலையில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் நீதிமன்றம் வழியாக தாசில்தார் அலுவலகம் வந்தடைந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட பிராசர குழு செயலாளர் கோபால் தலைமை தாங்கினார்.

இதே போன்று கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயேந்திரரை சங்கரமடத்தில் இருந்து விலக்க கோரி தஞ்சையிலும் திகசெயலவைத் தலைவர் தங்கராசு தலைமையில் பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரியிலும் சங்கராச்சாரியார்கள் பதவி விலகக் கோரி திகவினர் போராட்டம் நடத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+