பாமகவின் புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து
சென்னை:
ஆண்டுதோறும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் பண்ணை வீட்டில் கொண்டாடப்படும் புத்தாண்டுநிகழ்ச்சிகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் பாமக சார்பில் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12மணி 1நிமிடத்திற்கு, கட்சியின் நிறுவனத் தலைவருக்கு கட்சியினர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி கூறுவதும், அனைவரும்வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதும் வழக்கமாக நடைபெறும்.ஆனால் இந்த ஆண்டு மழையினால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தாலும், எம்.ஜி.ஆர். நகர், வியாசர்பாடி ஆகியபகுதிகளில் 48 பேர் உயிரிழந்த காரணத்தாலும், தமிழகம் முழுவதும் நிலவும் மழை, வெள்ள சோகத்தாலும், வழக்கமாககொண்டாடப்படும் புத்தாண்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது.
இதற்குப் பதில் டிசம்பர் 31ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம்தோட்டம், மாங்கனி அரங்கத்தில் கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும்.
இக் கூட்டத்தில் தமிழக, புதுவை மாநில பொறுப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழுஉறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இக் கூட்டத்திற்குப் பின்னர் மாலை 4 மணி முதல் 7 மணி வரை பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் மணி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications