எம்.ஜி.ஆர். நகர் இன்ஸ்பெக்டர் மாற்றம்
சென்னை:
வெள்ள நிவாரண நெரிசலில் 42 பேர் பலியானதையடுத்து சென்னை எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய சட்டம், ஒழுங்குஇன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் பெறக் காத்திருந்த 42 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாயினர். இந்தசம்பவத்திற்கு போலீஸாரின் அலட்சியப் போக்கே காரணம் என்றும், மாவட்ட நிர்வாகம் சரியான முறையில் பாதுகாப்புநடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக மாவட்ட கலெக்டர் சந்திரமோகன் மாற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து தியாகராய நகர்துணை போலீஸ் கமிஷ்னர் சேஷாயி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந் நிலையில் தற்போது எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார். வேறு பணி ஏதும் கொடுக்கப்படாமல் அவர் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
மாநகராட்சி கூடவில்லை:
இதற்கிடையே எம்.ஜி.ஆர். நகரில் 42 பேர் பலியானது குறித்து விவாதிக்க மாமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றசென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜனின் உத்தரவை ஆணையர் விஜயக்குமார் (அதாவது அரசு)ஏற்கவில்லை.
நெரிசல் பலிகள் குறித்து விவாதிக்க மாமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என தலைமறைவாக உள்ள கராத்தே தியாகராஜன்மாநகராட்சி ஆணையர் விஜயக்குமாருக்கு கடிதம் அனுப்பினார்.
இந் நிலையில் வதந்தி பரப்பியதாக கூறி திமுக கவுன்சிலர் தனசேகரன் கைது செய்யப்பட்டார். இது குறித்து விவாதிக்க மாமன்றக்கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிக் கவுன்சிலர்களும் ஆணையருக்கு கோரிக்கைவிடுத்திருந்தனர்.
ஆனால், துணை மேயர் மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் கோரிக்கையை விஜய்குமார் நிராகரித்து விட்டார்.
இதுகுறித்து மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் ராயபுரம் மனோ கூறுகையில், மாநகராட்சி விதிப்படி கூட்டத்தைக் கூட்டுவதற்குத்தேவையான உறுப்பினர்கள் கையெழுத்துப் போட்டுக் ஆணையரிடம் கூட்டத்தைக் கூட்டுமாறு மனு கொடுத்தோம். துணைமேயரும் இதுதொடர்பாக ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் ஜனநாயகப் படுகொலை செய்வது போல மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்க ஆணையர் மறுத்துவிட்டார்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூடி முடிவு செய்வார்கள். எங்களதுஉரிமையை நிலை நாட்ட தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications