பாலங்கள் கட்டியதில் ஊழல்: நிரூபித்தால் தூக்கில் தொங்குவேன்- ஸ்டாலின் ஆவேசம்
வள்ளியூர்:
சென்னை நகரில் மேம்பாலங்கள் கட்டியதில் என் மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால் அதே மேம்பாலத்தில் தூக்குப்போட்டுத் தொங்க நான் தயார் என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் ஆவேசமாகக் கூறினார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,சென்னை மாநகராட்சி மேயராக நான் இருந்தபோது, 10 மேம்பாலங்கள் கட்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி அனுமதிவழங்கினார்.
போக்குவரத்து நெரிசல், மக்கள் நலன் ஆகியவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு அந்தப் பாலங்களை கட்டினோம். இதில்பெரம்பூரைத் தவிர மற்ற பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன.
ஆனால் ஆட்சி மாறியதும், முதல் வேலையாக என்னையும், கருணாநிதியையும் ஜெயலலிதா ஊழல் வழக்கைப் போட்டு உள்ளேதள்ளினார். ஆனால் இந்த வழக்கில் நான்கு ஆண்டு காலம் ஆகியும் இதுவரை குற்றப் பத்திரிக்கையைக் கூட ஜெயலலிதாவால்தாக்கல் செய்ய முடியவில்லை.
காரணம் நாங்கள் செய்ததாக கூறப்படும் புகாரை நிரூபிக்க ஜெயலலிதாவால் முடியவில்லை.
இந்த வழக்கில் என் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால், எனது பதவிக் காலத்தில் கட்டப்பட்ட அதே பாலத்தில் நான் தூக்குப்போட்டுத் தொங்கத் தயாராக இருக்கிறேன் என்றார் ஸ்டாலின் ஆவேசமாக.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications