நீதிபதி வீட்டில் போலீஸ்காரர் தற்கொலை
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சர்தார் சக்காரியா உசேன் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர்தனது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சுந்தரம், ஆயுதப் படை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2000ம் ஆண்டுதான் இவர் பணியில்சேர்ந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் மாறுதலாகி சென்னைக்கு வந்துள்ளார்.உயர் நீதிமன்ற நீதிபதி சர்தார் சக்காரியா உசேனின் வீட்டில் பணியில் அமர்த்தப்பட்டார். சக காவலர்களான பாலமுருகன்,நாகராஜன், ராஜா ஆகியோருடன் மூலகொத்தளம் பகுதியில் வீடு எடுத்துத் தங்கியிருந்தார்.
இந் நிலையில் மாலை 6 மணியளவில், நீதிபதியின் வீட்டில் தனது பாதுகாப்பு அறையில் இருந்த சுந்தரம், திடீரென கையில்வைத்திருந்த 303 ரக துப்பாக்கியை தனது தொண்டையில் வைத்து சுட்டுக் கொண்டார்.
இதில் குண்டு அவரது தலையின் பின்பக்கத்தை துளைத்துக் கொண்டு வெளியேறியது. சம்பவ இடத்திலேயே சுந்தரம் இறந்துபோனார்.
குண்டு வெடித்த சப்தம் கேட்டு நீதிபதி வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது சுந்தரம் இறந்து கிடந்தது தெரிய வந்தது.காவல்துறை ஆணையர் நடராஜ், இணை ஆணையர் சைலேந்திர பாபு உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணைமேற்கொண்டனர்.
தற்கொலை செய்து கொண்ட சுந்தரம் கடிதம் எதையும் எழுதி வைக்கவில்லை. அவருக்கு குடும்பப் பிரச்சினையாைே, காதல்பிரச்சினையோ, பணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனத் தெரிகிறது.
இந் நிலையில் அவர் நீதிபதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications