கண்டன ஆர்பாட்டத்தில் கருணாநிதியும் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைவலியுறுத்தியும், எம்ஜிஆர் நகர் நெரிசல் பலிக்கு எதிர்க் கட்சிகள் மீது வழக்குப் போடுவதைக் கண்டித்தும் திமுக கூட்டணிக்கட்சிகள் சார்பில் வரும் 30ம் தேதி நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்கிறார்.சென்னையில் நடக்கும் போராட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளார்.
தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் சென்னையில் நடக்கும் போராட்டத்திற்குத் கருணாநிதியே தலைமை தாங்குகிறார். இதில் மதிமுக பொதுச் செயலாளர்வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
விழுப்புரத்தில் ஸ்டாலினும், காஞ்சிபுரத்தில் அன்பழகனும் போராட்டத்துக்குத் தலைமை தாங்குகின்றனர்.












Click it and Unblock the Notifications