தீயிக்கு இரையான 40 சுனாமி வீடுகள்
பொரயாறு:
சுனாமி முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியின் போது தரங்கம்பாடியில் பெரிய தீவிபத்து ஏற்பட்டு 40 சுனாமி தற்காலிகவீடுகள் எரிந்து நாசமாகின.
தரங்கம்பாடியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகரத்தால் ஆன கூரையில் தற்காலிக வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.இந்த கூரையின் வெப்பம் தாங்க முடியாமல் அதில் குடியிருக்கும் மக்கள் வைக்கோல் மற்றும் தென்னம் ஓலையை கொண்டுகூரையை வேய்ந்துள்ளனர்.இந்த நிலையில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் ஓராண்டு நினைவாஞ்சலியை அனுசரிக்கும் வகையில் தரங்கம் பாடி சுனாமிதற்காலிக குடியிருப்பு மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தனர்.
இந்த மெழுகுவர்த்தியின் தீ எதிர்பாராதவிதமாக தற்காலிக வீடுகளின் கூரையில் பற்றி ஒவ்வொரு வீடாக வேகமாக பரவியது.இதனால் அங்கிருந்த 40 வீடுகளும் தீயில் எரிந்து நாசமாயின. ஆனால் அதில் வசித்த மக்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பாகவெளியேறிவிட்டனர்.
உடனே பொரயாறு, காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் இந்த பகுதியில் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மின்சாரஇணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நாங்கள் வைத்திருந்த உடைமைகள் அத்தனையும் தொண்டு நிறுவனங்களால் தரப்பட்டது. அதை மீண்டும் நாங்கள் இழந்துவிட்டோமே என்று பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications