குஜராத்தில் 26 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு: கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள்?
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் மனித எலும்பு கூடு குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. அவை கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தையடுத்து குஜராத்தில் நடந்த பயங்கர கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாயினர்.அப்பாவி இந்துக்களும் முஸ்லீம்களும் மத வெறிக் கும்பல்களால் கொல்லப்பட்டனர்.கலவரத்தின் பாது பண்டவாடா என்ற கிராமத்திலும் பெரும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.
இந்த கிராமத்தைச் சேர்ந்த பலர் கலவரத்துக்குப் பின் காணாமல் போய்விட்டனர். இந் நிலையில் பானம் ஆற்றின் கரையில்மயானத்துக்கு அருகே ஓரே இடத்தில் ஏராளமான மனித எலும்பு கூடுகள் ஒன்றாக புதைந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.இந்த இடத்தை தோண்டி பார்த்த போது 26 எலும்பு கூடுகள் கிடைத்தன. இதில் 21 எலும்பு கூடுகள் அடையாளம்காணப்பட்டுள்ளன.
மேலும் கிழிந்த நிலையில் சில உடைகளும் சிக்கின. இந்த எலும்புக் கூடுகள் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால், இவை கலவரத்தில் பலியானவர்களின் உடல்கள் என்றும், ஏற்கனவே உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு,பின்னர் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு முறைப்படி புதைக்கப்பட்ட உடல்களின் எலும்புக் கூடுகள் என நரேந்திர மோடியின்குஜராத் அரசு கூறுகிறது. இதை நம்ப பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை.
அந்த கிராமத்தில் கொல்லப்பட்ட சிறுபான்மையினரின் உடல்களை, கொலை செய்த கும்பலும் குஜராத் போலீசாரும் இணைந்துமொத்தமாகப் புதைத்திருக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
மோடி அரசின் கருத்தை ஏற்காத மத்திய அரசு இந்தப் பகுதிக்கு சிபிஐ குழுவை இன்று அனுப்பி வைத்துள்ளது. உடல்களைசோதனையிடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே எலும்புக் கூடுகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் இன்றே வழக்கு தொடரப்போவதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications