ராஜபக்ஷே சென்னை வருகை: அகதிகள் முகாம்களில் போலீஸ் சோதனை
சென்னை:
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே சென்னைக்கு வரவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார்இன்று தீவிர சோதனை நடத்தினர்.
நேற்று இந்தியா வந்த ராஜபக்ஷேவுக்கு இன்று ஜனாதிபதி மாளிகையில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது நிருபர்களிடம் பேசிய ராஜபக்ஷே, அமைதி முயற்சிகளுக்கு இந்தியா பெரும் ஆதரவு தந்து வந்தது. அந்த ஆதரவுதொடரும் என்று நம்புகிறேன். அதே நேரத்தில் இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த அமைதி முயற்சிகளில் இந்தியாவும்பங்கேற்க வேண்டும் என்றார்.
ஜனாதிபதி கலாம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் பேச்சு நடத்தும் ராஜபக்ஷே, நாளை மறுநாள் கேரளா செல்கிறார்.குருவாயூர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு சென்னைக்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பார் என்று தெரிகிறது.
அவரது சென்னை வருகையையொட்டியும், இலங்கையில் தற்போது நிலவும் பதட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும்தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் சோதனை நடத்த போலீஸார் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து கியூ பிராஞ்ச் போலீஸார் இன்று காலை திருச்சி விமான நிலையம் அருகே உள்ள கொட்டப்பட்டு அகதிகள்முகாமுக்குச் சென்று சோதனை நடத்தினர். அங்குள்ள 409 வீடுகளிலும் சோதனை நிடத்தப்பட்டது.
குடும்ப அட்டைகளைப் பரிசோதித்த போலீஸார், அதில் உள்ள அனைவரும் வீடுகளில் இருக்கிறார்களா, யாராவது முகாமைவிட்டு வெளியே சென்றிருக்கிறார்களா, வேறு யாரேனும் புதியவர்கள் வீடுகளில் தங்கியுள்ளார்களா, அபாயகரமான பொருட்கள்வீடுகளில் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தினர்.
இதேபோல சென்னை அருகே உள்ள புழல் முகாம், சேலம் அருகே உள்ள தாரமங்கலம் முகாம் ஆகியவற்றிலும் போலீஸார்சோதனை நடத்தினர்.
ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் இன்று மாலை சோதனை நடத்தப்படவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications