இன்டர்நெட் மையங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் உள்ள இணைய தள மையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்துள்ளனர். ஜனவரி 1ம் தேதி முதல்இவை அமலுக்கு வருகின்றன.

நாடாளுமன்றத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் அனுப்பியவரைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.இ-மெயில் அனுப்பப்ப்பட்ட மையத்தைக் கண்டுபிடித்துள்ள போதிலும், மெயில் அனுப்பியவர் யார் என்பதை அறிய முடியாமல்போலீஸார் திணறி வருகின்றனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள இணைய தள மையங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் இந்தப் புதிய கட்டுப்பாடுகள் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

அதன்படி, இணைய தள மையங்களுக்கு பிரவுசிங் செய்ய வருவோரின் வீட்டு முகவரி, அவரது வீட்டு முகவரி அல்லதுஅவருக்கான ஏதாவது அடையாள அட்டை ஆகியவற்றை கண்டிப்பாக காட்டியாக வேண்டும்.

அதேபோல, மூடிய அறைகளுக்குள் பிரவுசிங் செய்ய அனுமதிக்கக் கூடாது. உள்ளே நுழைந்தது முதல் வெளியே செல்லும்வரையிலான நேரத்தை சரியான முறையில் புத்தகத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.

பிரவுசிங் செய்வோர் அனைவரின் முகங்களும் தெளிவாக பதிவாகும் வகையிலான குளோஸ் சர்க்யூட் கேமரா மையத்தில்பொருத்தப்பட வேண்டும். சந்தேகத்திற்குரிய வகையில் யாராவது பிரவுசிங் செய்தாலோ அல்லது அடிக்கடி பிரவுசிங் செய்யவந்தாலோ அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.

இதுபோல பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சென்னை போலீஸ்.

நகரில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட இணைய தள மையங்களில் இந்தப் புதிய கட்டுப்பாடுகள் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்குவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக அனைத்து இணைய தள மையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் மிக அதிகமாக பாதிக்கப்பட போவது அப்பாவிகளும், மாணவர்களும் தான். பிரவுசிங் செய்யப் போகும்எல்லோரிடமும் ஏதாவது ஒரு அடையாள அட்டை கட்டாயமாக இருந்தாக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

எல்லா பிரவுசிங் சென்டர்களாலும் குளோஸ் சர்க்யூட் கேமரா வைத்து கண்காணிக்க முடியுமா என்றும் தெரியவில்லை. அவர்கள்எத்தனை நாளைக்கு கேமராவில் பதிவாகும் அந்த வீடியோக்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படவில்லை.இந்த கேமராவுக்கும் வீடியோ பிலிமுக்கும் ஆகும் செலவு இனிமேல் பிரவுசிங் செய்யச் செல்பவர்கள் மீது தான் விழும்.

அதே போல கம்ப்யூட்டர் ஸ்கிரீன்கள் வெளியில் தெரியும்படி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அதைப்பயன்படுத்துவோரின் ப்ரைவஸி பாதிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+