வெள்ள நிவாரணம்: ப.சிக்கு இ. கம்யூ கண்டனம்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மாநில அரசு கோரிய நிதியை ஒதுக்கித் தருவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர்ப.சிதம்பரம் எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ப.சிதம்பரம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தானே? சிவகங்கை அவரதுதொகுதி தானே? தமிழகம் இந்தியாவில் தானே இருக்கிறது?

தமிழக அரசு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ. 13,000 கோடியைக் கோரியுள்ளது. ஆனால் இதுவரை வெறும் 1000 கோடிரூபாயை மட்டும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

ப.சிதம்பரம் நிதி அமைச்சர் தானே, அவர் சார்ந்த தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் முழுமையான அளவில் முடங்கிப்போயுள்ள நிலையில், நிதியைப் பெற்றுத் தருவதில் ஏன் அவர் அக்கறை காட்டவில்லை? அவரைத் தேர்ந்தெடுத்த மக்கள் கேட்கும்கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஜனவரி 15ம் தேதி வரை மத்திய அரசுக்கு அவகாசம் தருகிறோம். அதற்குள், தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவேண்டும். இல்லாவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்தவும் நாங்கள் தயங்கமாட்டோம் என்றார் தா.பாண்டியன்.

நல்லகண்ணு விலகி தா.பாண்டியன் தலைவரானது முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சமீபகாலமாக திமுகவுடன் மோதி வருவதுகுறிப்பிடத்தக்கது. இப்போது காங்கிரசுடனும் மோதலைத் தொடங்கியுள்ளார் பாண்டியன்.

இதன் பின்னணியில் அதிமுக இருக்குமோ என்ற கிலியில் உள்ளது திமுக கூட்டணி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+