விஜயகாந்த் வேன் மீது தொண்டர்கள் தாக்குதல்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இரு கிராமங்களுக்கு வராமல் விஜயகாந்த் சென்றதால், ஆத்திரமடைந்தஅவரது கட்சித் தொண்டர்கள், அவரது வேன் மீது சரமாரியாகக் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். கட்சிக் கொடிகளும், பேனர்களும்கிழித்து எறியப்பட்டன.
தேசிய முற்போக்குத் திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். விருதுநகர் மாவட்டத்தின் பலவேறு ஊர்களில் அவர் 3 நாட்களாக சுற்றுப்பயணம் செய்தார்.ராஜபாளையத்தை முடித்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த அவர் அங்கு பேசினார். பின்னர் மேலத்தொட்டியபட்டி,பிள்ளையார்நத்தம் ஆகிய ஊர்கள் வழியாக வத்திராயிருப்பு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே நெடுநேரம் ஆகி விட்டதால் நேரடியாக வத்திராயிருப்பு செல்ல விஜயகாந்த் முடிவு செய்தார்.
இதற்கு பிள்ளையார்நத்தம், மேலத்தொட்டியபட்டி கிராம தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எங்கள் ஊர்களுக்குள் வராமல்போகக் கூடாது. அப்படிச் செல்ல முயன்றால் நாங்கள் விட மாட்டோம் என்று கூறி விஜயகாந்த் வேனைத் தடுத்து நிறுத்தினர். சிலர்வேன் முன்பாக படுத்துக் கொண்டனர்.
நேரமாகி விட்டதால்தான், நேராக வத்திராயிருப்பு செல்வதாகவும், இன்னொரு முறை வருவதாகவும் விஜயகாந்த் கூறினார்.ஆனால் அதை தொண்டர்கள் ஏற்கவில்லை. இருப்பினும், விஜயகாந்த் வேனை பின்னால் எடுக்குமாறு கூறி அங்கிருந்துகிளம்பினார். இதைப் பார்த்த தொண்டர்கள் ஆத்திரமடைந்தனர்.
சாலையின் இரு மருங்கிலும் கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடிகள், பேனர்கள், டியூப் லைட்டுகளை அடித்து நொறுக்கிசேதப்படுத்தினர். அப்படியும் ஆத்திரம் தாங்காமல், சாலையில் கிடந்த சரளைக் கற்களை எடுத்து விஜயகாந்த் வேன் மீதுசரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தினார்.
இதைப் பார்த்து விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் வேன் வத்திராயிருப்பு நோக்கி வேகமாக பறந்து விட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications