டமால் ஆகிறது விஜயகாந்த்தின் கல்யாண மண்டபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள விஜயகாந்துக்கு சொந்தமான கல்யாண மண்டபம் இடிக்கப்படுகிறது.

நடிகர் விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் கோயம்பேடு 100 சாலையில் அவரது மனைவிபிரேமலதா பெயரில் உள்ளது.

கோயம்பேட்டில் புதிய மேம்பாலம் கட்ட மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தீவிரம் காட்டினார். இதற்காக இப் பகுதியில் சிலகட்டடங்கள் இடிபடும் சூழல் உருவானது. இதில் விஜய்காந்தின் கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதியும் இடிக்கப்பட வேண்டியநிலை உருவானது.

நாட்டுக்காக எதையும் செய்வேன் என்று அடிக்கடி கூறும் விஜய்காந்த், மக்கள் தேவைக்காகக் கட்டப்படும் மேம்பாலத்துக்காகதனது மண்டபத்தின் ஒரு பகுதி இடிபடுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக தனது கல்யாண மண்டபத்தை இடிக்கச் சதி நடப்பதாகவும், இதற்காக வேண்டுமென்றேமேம்பாலத்தை மண்டபத்தை ஒட்டிக் கட்ட மத்திய அரசு திட்டமிடுவதாகவும் புகார் கூறினார்.

திடீரென திமுக தலைவர் கருணாநிதியைப் போய்ப் பார்த்து மேம்பாலத்துக்கு புதிய பிளானையும் தந்தார் விஜய்காந்த். அது குறித்துடி.ஆர்.பாலுவிடம் கருணாநிதி பேச, பாலு தனது அதிகாரிகளுடன் பேசினார்.

ஆனால், விஜய்காந்த் தந்துள்ள புதிய பிளான்படி மேம்பாலம் கட்ட முடியாது என அதிகாரிகள் கைவிரித்துவிட, தன்னால் உதவமுடியாது என்பதை விஜய்காந்திடம் தெரிவித்தார் கருணாநிதி.

இதையடுத்து திடீரென மண்டபத்துக்குள்ளேயே ஒரு பகுதியில் தனது கட்சி அலுவலகத்தைத் திறந்தார் விஜய்காந்த். கட்சிஅலுவலகம் இருப்பதால் மண்டபத்தின் மீது கை வைக்க மாட்டார்கள் என்று நினைத்தாரோ என்னவோ.

இந் நிலையில் மேம்பாலம் கட்டுவதற்காக விஜயகாந்த் மண்டபத்தை இடிக்க மத்திய அரசு தற்போது களம் இறங்கியுள்ளது.மத்திய அரசின் நெடுஞ்சாலை துறை விஜயகாந்த் வீட்டுக்கு இதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் விஜயகாந்த் மனைவிபிரேமலதா பெயரில் வார்டு எண் 43 சர்வே எண் 14/2 உள்ள 286 சதுர மீட்டர் நிலத்தையும் சர்வே எண் 14/3ல் உள்ள 165 சதுரமீட்டர் நிலத்தையும் கையகப்படுத்த உள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை தவிர கோயம்பேட்டில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலம் உள்பட 40க்கும் மேற்பட்ட நிலஉரிமையாளர்களின் நிலத்தை கையகப்படுத்த போவதாகவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அனைவரும் ஒரிஜனல் பத்திரங்களுடன் வரும் 5ம் தேதி காலை பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில் ஆஜராகுமாறும்உத்தரவிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையின் நில ஆர்ஜிதத்தால் விஜயகாந்த் மண்டபத்தில் இரண்டு பகுதிகள் இடிபடும்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை எதிர்த்து வழக்கு தொடரலாமா என்று விஜயகாந்த் ஆலோசனை செய்து வருவதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+