கேரள பஸ் ஸ்டிரைக்: தமிழக அரசு பேருந்து நொறுக்கப்பட்டது
நாகர்கோவில்:
கேரளாவில் அரசுப் பேருந்துகள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து கேரளா செல்லும்தமிழக அரசுப் பேருந்துகள் குமரி மாவட்ட எல்லை நகரான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டுள்ளன.
அகவிலைப்படி உயர்வு கோரி கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்துவருகின்றனர். இதனால் கேரள மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகள் ஓடவில்லை.இந்த வேலைநிறுத்தம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துப் போக்குவரத்தும்பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று நாகர்கோவிலிலிருந்து கேரளாவுக்கு சென்ற தமிழக அரசுப் பேருந்து, கேரள மாநில அரசுப்போக்குவரத்துக் கழக ஊழியர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை முதல் நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் தமிழகஅரசுப் பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக பயணிகள் பெரும்பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அதேசமயம், கோவையிலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துப் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. இதனால்கோவை மாவட்டத்திலிருந்து வாலையாறு வழியாக கேரளாவுக்குள், தமிழக அரசுப் பேருந்துகள் வழக்கம் போல சென்றுவருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications