இலங்கையில் மீண்டும் வெடிக்கும்: நார்வே
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்காவிட்டால் இலங்கையில் மீண்டும் விரைவில் போர் மூள்வதை யாராலும்தடுக்க முடியாது என நார்வே எச்சரித்துள்ளது.
நார்வே தலைமையில் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கும் 5 நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை அமைதிக்கண்காணிப்புக் குழுவினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.இந்தக் குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹாக்லேண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இந்த மாதத்தில் மட்டும் 83 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகள் உடனடியாகநிறுத்தப்பட வேண்டும். மீண்டும் உடனே பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும்.
இல்லாவிட்டால் விரைவில் போர் வெடிப்பது உறுதி. உயிர்ப் பலிகள் தொடர்வது பேச்சுவார்த்தைக்கு உகந்தது அல்ல. இதே போலகொலைத் தாக்குதல்கள் தொடர்ந்தால் போர் வெகு தூரத்தில் இல்லை.
இங்கு நிலவும் பயங்கரமான சூழ்நிலையில் அமைதியைக் கண்காணிக்கும் எங்களுக்கும் பாதுகாப்பில்லை. அடையாளம்தெரியாத கும்பல்களால் எங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது போன்ற பாதுகாப்பில்லாத சூழலில் எங்களால் செயல்படமுடியாது.
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சு நடந்தால் மட்டுமே இலங்கையில் அமைதி திரும்பும் என்று கூறியுள்ளார்.
உடனே பேச்சுவார்த்தையைத் தொடங்கும்படி இலங்கை அரசை நார்வே தூதர் எரிக் சோல்ஹைம் நேற்று மீண்டும் வலியுறுத்தியதுகுறிப்பிடத்தக்கது.
அவர் வெளியிட்ட அறிக்கையில், பேச்சுவார்த்தையை எங்கு நடத்துவது என்பது முக்கியமில்லை. உடனே இரு தரப்பினரும்பேச்சு நடத்துவது மிக அவசியம். இதனால் எங்கு பேச்சு நடத்துவது என்ற பிரச்சனையை இரு தரப்பினரும் விட்டுவிட்டுபேச்சுவார்த்தைக்குத் தயாராக வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications
