ராஜபக்ஷே வருகைக்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு
சென்னை:
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவின் இந்திய வருகை உள்நோக்கம் கொண்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நார்வே தூதுக்குழு மேற்கொண்டு வந்த அமைதி முயற்சிகளை வெற்றிகரமாக சீர்குலைத்த பின்னர், தற்போது விடுதலைப்புலிகளை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சியில் இலங்கை அதிபர் இறங்கியுள்ளார்.
இதற்கு இந்தியாவை அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தினால்தான் முடியும். அப்போதுதான் பல காலத்திற்கு இந்தப்பிரச்சினை இழுபறியாக இருக்கும் என்று நினைக்கிறார் இலங்கை அதிபர். அந்த நோக்கத்தில்தான் தற்போது அவர் இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை அவர் மறைமுகமாக தொடங்கி விட்டார். அதை மறைத்துக் கொண்டு அப்பாவி போலஇந்தியா வந்துள்ளார். இலங்கை அரசும், ராணுவமும் செய்யும் தவறுகள், விதிமீறல்களால் அங்கு பிரச்சினைஏற்படும்போதெல்லாம் உடனே இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்து விடுகிறார்கள்.
அப்போதுதான், தங்களது செயல்களுக்கு இந்தியா ஆதரவாக இருப்பதாக உலக சமுதாயம் நினைக்கும் என்பது அவர்களதுஎண்ணம்.
இலங்கை அரசின் இந்த உள்நோக்கம் கொண்ட எண்ணத்திற்கு இந்தியா அடிபணிந்து, ஏமாந்து விடக் கூடாது என்று கூறியுள்ளார்ராமதாஸ்.
முன்னதாக திரைப்படங்கள், பத்திரிக்கைகளில் ஆபாசம் அதிகரித்திருப்பதைக் கண்டித்து சென்னையில் பாமக மகளிர் அணிசார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இப் போராட்டத்தை ராமதாஸ் தொடங்கி வைத்து பேசுகையில், தமிழ் திரைப்படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை.காரணம் அதில் மிதமிஞ்சி நிற்கும் ஆபாசம். கற்பழிப்புக் காட்சிகளை விலாவாரியாக காட்டுகிறார்கள்.
அதேபோல பல பத்திரிக்கைகளும் ஆபாசத்திற்கேமுக்கியத்துவம் கொடுக்கின்றன. இன்று ஒரு பத்திரிக்கையில் ஆபாசப்படங்கள் நிறைந்து வெளியாகியுள்ளது. அந்தப் பத்திரிக்கைக்கு நச்சுன்னு இருக்கு என்று விளம்பரம் செய்கிறார்கள்.
திரைப்படங்களும், பத்திரிக்கைகளும் ஆபாசத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பாமக தீவிரப் போராட்டத்தில்குதிக்கும் என்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications