சென்னையில் அதிரடி சோதனை: ஐஐடி, டைடல் பூங்காவுக்கு பலத்த பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெங்களூரில் தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளதையடுத்து சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பலமுக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெங்களூர் இந்திய அறிவியல் கழக வளாகத்தில் அமைந்துள்ள ஜே.என். டாடா கருத்தரங்கக் கூட வளாகத்தில், தீவிரவாதிகள்நடத்திய அதிரடித் தாக்குதலில் டெல்லியைச் சேர்ந்த விஞ்ஞானி பூரி கொல்லப்பட்டார்.

இதையடுத்து சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய ரயில் நிலையங்கள், விமான நிலையம், அண்ணாபல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாகத்தில் உள்ள கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள், ஐஐடி, டைடல் பூங்கா, பழையமகாபலிபுரம் சாலையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர சென்னையில் தங்கியுள்ள முக்கிய விஞ்ஞானிகள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக மாநகரகாவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளிலும், யாராவது புதியவர்கள்,சந்தேகத்திற்கிடமானவர்கள் தங்கியுள்ளார்களா என்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்கள், ரயில்கள், பேருந்துகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்திவருகின்றனர். பெங்களூரில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் சென்னைக்குள் ஊடுறுவி விடாமல் தடுக்க உஷார் நிலையில்போலீஸார் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குள் வரும் சாலை மார்க்கத்தையும் போலீஸார் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

அதே போல தாம்பரத்தில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான ஏற்றுமதி வளாகத்தில் உள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள்,வெளிநாட்டினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எல்லையில் விடிய விடிய சோதனை

இதற்கிடையே பெங்களூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், தமிழகத்திற்குள் ஊடுறுவி விடாமல் தடுக்க தமிழக, கர்நாடகஎல்லைப் பகுதியில் போலீஸார் நேற்றிரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பெங்களூர் சம்பவத்தைத் தொடர்ந்து, ஹைதராபாத்திலும், சென்னை மற்றும் தமிழகத்திலும் பாதுகாப்புஉஷார்படுத்தப்பட்டுள்ளது. தமிழக, கர்நாடக எல்லை பகுதியான ஒசூரில் நேற்று இரவு விடிய விடிய வாகனச் சோதனைநடைபெற்றது.

பெங்களூரிலிருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு தளி, அந்திவாடி உள்ளிட்ட இடங்களில் 10 சோதனைச் சாவடிகள்அமைக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல சென்னை நகருக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவி விடாமல் தடுப்பதற்காக, சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில்பூந்தமல்லியில் வாகனச் சோதனை நடத்தப்பட்டது.

ரயில் மூலம் தீவிரவாதிகள் வந்து விடக் கூடாது என்பதற்காக பெங்களூரிலிருந்து சென்னை வரும் அனைத்து ரயில்களிலும்போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். ஜோலார்பேட்டை, சேலம்,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் சோதனைநடத்தப்பட்டது.

பெங்களூர் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் சென்னைக்குள் ஊடுறுவிடாமல் தடுக்கத் தேவையான கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார்.

இன்றும் சோதனைகளும் கண்காணிப்பும் தொடர்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+