நடமாடும் ஆசிரியர்கள்: தமிழக அரசு திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு வீடு தேடிச் சென்று போதனை செய்வதற்கு வசதியாக நடமாடும் ஆசிரியர்களை நியமிக்கதமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டம் மூலம் இந்த நடமாடும் ஆசிரியர்கள் திட்டம் செயல்படுத்தப்படும் எனகல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 4,000 முறைசாரா கல்வி மையங்கள் மூலம் நடமாடும்ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

மலைவாழ் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி போதிப்பதற்காக இந்த நடமாடும் ஆசிரியர்கள் நேரடியாகஅவர்களது வீடுகளுக்கே சென்று பாடம் நடத்துவர். இதற்காக முதல் கட்டமாக 1,000 நடமாடும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

இவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகையாக வழங்கப்படும். 33,000 மலைவாழ் பழங்குடியினருக்கு முதல்கட்டமாக பாடம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் ஆசிரியர்களுக்கு, சுய உதவிக் குழு உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவிகரமாகஇருப்பார்கள்.

இதுதவிர பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்களுக்கும் இந்த நடமாடும் ஆசிரியர்கள் மூலம் கல்வி போதிக்கப்படும். 20,000மாணவர்களுக்குக் கல்வி அளிப்பது என முதல் கட்ட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கு இலவசசீருடை, பாடப் புத்தகங்கள், உணவு ஆகியவற்றை அரசே வழங்கும்.

வரும் ஜனவரி முதல் இத் திட்டம் அமலுக்கு வரவுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+