பெங்களூர் பயங்கரம்: தமிழக-கர்நாடக எல்லையில் விடிய விடிய சோதனை
சென்னை:
பெங்களூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், தமிழகத்திற்குள் ஊடுறுவி விடாமல் தடுக்க தமிழக, கர்நாடக எல்லைப்பகுதியில் போலீஸார் நேற்றிரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பெங்களூர் இந்திய அறிவியல் கழக வளாகத்தில் நேற்றிரவு 7.15 மணியளவில்முகமூடி அணிந்த தீவிரவாதி ஒருவன்கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் டெல்லி ஐ.ஐ.டி. முன்னாள் பேராசிரியர் எம்.சி.பூரி கொல்லப்பட்டார்.இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச்சேர்ந்த தீவிரவாதிதான் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இத் தாக்குதலைத் தொடர்ந்து பெங்களூர் நகர் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தீவிரவாதியைத் தேடும் பணிதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூர் சம்பவத்தைத் தொடர்ந்து, ஹைதராபாத்திலும், சென்னை மற்றும் தமிழகத்திலும் பாதுகாப்புஉஷார்படுத்தப்பட்டுள்ளது. தமிழக, கர்நாடக எல்லை பகுதியான ஒசூரில் நேற்று இரவு விடிய விடிய வாகனச் சோதனைநடைபெற்றது.
பெங்களூரிலிருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு தளி, அந்திவாடி உள்ளிட்ட இடங்களில் 10 சோதனைச் சாவடிகள்அமைக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல சென்னை நகருக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவி விடாமல் தடுப்பதற்காக, சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில்பூந்தமல்லியில் வாகனச் சோதனை நடத்தப்பட்டது.
ரயில் மூலம் தீவிரவாதிகள் வந்து விடக் கூடாது என்பதற்காக பெங்களூரிலிருந்து சென்னை வரும் அனைத்து ரயில்களிலும்போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். ஜோலார்பேட்டை, சேலம்,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் சோதனைநடத்தப்பட்டது.
பெங்களூர் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் சென்னைக்குள் ஊடுறுவிடாமல் தடுக்கத் தேவையான கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார்.
இன்றும் சோதனைகளும் கண்காணிப்பும் தொடர்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications