மிக முக்கிய பிரச்சனையில் விஜயகாந்த்
மதுரை:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனது பிரசார வேன் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியது கட்சித் தொண்டர்களா அல்லது அவர்களதுபோர்வையில் வந்த வேறு யாருமா என்பது குறித்து தனது கட்சி நிர்வாகிகளிடம் விஜயகாந்த் மதுரையில் விசாரணை நடத்தினார்.
விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் விஜயகாந்த், பல்வேறு பகுதிகளுக்கு சென்று கூட்டங்களில்பேசினார். ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த அவர் அங்கிருந்து வத்திராயிருப்பு செல்ல முடிவு செய்தார்.ஆனால் ஏற்கனவே கூறியபடி, மேலத்தொட்டியபட்டி, பிள்ளையார்நத்தம் ஆகிய கிராமங்களுக்கு விஜயகாந்த் வந்தே ஆகவேண்டும் என்று அவரது கட்சித் தொண்டர்கள் அவரது வேன் முன்பு கூடி கோஷமிட்டனர்.
ஆனால் தனக்கு நேரமாகி விட்டதாகக் கூறிய விஜயகாந்த் அவர்களைக் கண்டுகொள்ளாமல் அங்கிருந்துகிளம்பிச் சென்றார்.இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள், விஜயகாந்த்தின் பிரசார வேன் மீது சரமாரியாக சரளைக் கற்களை வீசி தாக்குதல்நடத்தினர். கட்சிக் கொடி, பேனர்கள், டியூப் லைட்டுகளையும் அடித்து நொறுக்கினர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த விஜயகாந்த், தனது தேனி மாவட்ட சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு மதுரைதிரும்பினார். மதுரைக்கு சென்றவுடன், விருதுநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகள், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிநிர்வாகிகளை அழைத்து விசாரணை நடத்தினார்.
தனது வேன் மீது கல்வீசியவர்கள் யார்? நமது கட்சியைச் சேர்ந்தவர்களா, ரசிகர்களா அல்லது வேறு ஏதேனும் அமைப்பைச்சேர்ந்தவர்களா என்பது குறித்து அவர்களிடம் விசாரித்து அறிந்தார் விஜயகாந்த்.
தாக்கியது நம்மவர்களே என்று அவர்கள் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications