பாஜகவில் ராம-லட்சுமணர் யார்?
மும்பை:
இனிமேல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மாஜி பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளார்.
மும்பையில் நடந்து வரும் பாஜகவின் வெள்ளி விழா மாநாட்டில் இந்தக் குண்டைப் போட்டார் வாஜ்பாய்.மேலும் அத்வானியும்-பிரமோத் மகாஜனும் ராம-லட்சுமணர்கள் போல என்று வாஜ்பாய் கருத்து தெரிவித்துள்ளதும் பாஜகவில்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாஜ்பாயும்-அத்வானியும் ராம-லட்சுமணர்கள் போல் என்று பிரமோத் மகாஜன் கூறியிருந்தார்.
பிற தலைவர்கள் அத்வானியும்-வெங்கையா நாயுடுவும் தான் ராம-லட்சுமணர்கள் என்றனர். இவர்களுக்கு இடையிலானநெருக்கத்தை மனதில் வைத்து இவ்வாறு கூறி வருகின்றனர்.
இந் நிலையில் அத்வானியும் மகாஜனும் தான் ராம லட்சுமணர்கள் என்று கூறியுள்ளதன் மூலம் வெங்கையா நாயுடு மீதான தனதுவெறுப்பை வாஜ்பாய் காட்டியுள்ளதாக அந்தக் கட்சியினர் கருதுகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவிக்க மகாஜன் மறுத்துவிட்டார். நான் இப்போது எதைச் சொன்னாலும் அதை வேறு மாதிரி நீங்கள்(நிருபர்கள்) எடுத்துக் கொள்வீர்கள் என்றார் மகாஜன்.
கட்சியின் மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜ் கூறுகையில், அத்வானி தனது லட்சுமணனாக வெங்கையா நாயுடுவைத் தான் தேர்வுசெய்தார். ஆனால், வாஜ்பாயோ புதிதாக ஒன்றைச் சொல்கிறார்.
கட்சியில் ஒவ்வொருவருமே லட்சுமணர்களைத் தேடிக் கொண்டு தான் இருக்கிறோம். எனக்கு லட்சுமணன் இவர் தான் (அருகில்நின்றிருந்த எம்பி அலுவாலியாவைக் காட்டி) என்றார் சுஷ்மா.
எல்லோருக்கும் ஒரு படி மேலே போன வெங்கையா நாயுடு கூறுகையில், கட்சி தான் ராம். கட்சிக்காக உழைக்க வேண்டியதுஒவ்வொருரின் கடமை. நான் லட்சுமணன் அல்ல, ஹனுமன். கட்சியில் ஏகப்பட்ட லட்சுமணர்கள், பரதர்கள், சத்ருகனர்கள்இருக்கிறார்கள். கட்சியே மிகப் பெரிய வானர சேனை தான் என்றார்.
இதற்கிடையே இனிமேல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற வாஜ்பாயின் அறிவிப்பு கட்சிக்குள் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
வாஜ்பாயின் இந்த முடிவு இப்போது தான் எனக்குத் தெரியும் என்று கூறிய அத்வானி, சில காலமாக வாஜ்பாய் உடல் நலமின்றிஇருக்கிறார். இதனால் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்றார்.
எதற்காக வாஜ்பாய் இவ்வாறு பேசினார், அதன் பின்னணி என்ன என்பதை அறிந்துவிட்டு கருத்துத் தெரிவிப்பதாக உபி மூத்தபாஜக தலைவப் கல்ராஜ் மிஸ்ரா கூறினார். கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜாவேல்கர், வாஜ்பாயின் கருத்து குறித்து ஏதும்கூற மறுத்துவிட்டார்.
இதற்கிடையே, பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாஜ்பாயும் அத்வானியும் கட்சியை வழி நடத்துவார்கள் எனவெங்கையா கூறியுள்ளார்.
இந்தக் குழப்பங்களுக்கு இடையே சிவசேனையில் இருந்து விலகிய பால்தாக்கரேவின் சகோதரியின் மகனான ராஜ் திடீரெனமாநாட்டுக்கு வந்து வாஜ்பாயையும் அத்வானியையும் சந்தித்துவிட்டுச் சென்றார். இதனால் பாஜக மீது பால் தாக்கரேகடுப்படைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications