புத்தாண்டு: போலீஸ் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்
சென்னை:
புத்தாண்டைக் கொண்டாட விதிக்கப்பட்ட தடைகளை தமிழக போலீசார் திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில் சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடைபெறாமல்தடுக்கும் பொருட்டு, 31ம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணி முதல் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் இறங்கவுள்ளதாக மாநகரகாவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார்.சனிக்கிழமை 2006ம் ஆண்டு பிறக்கிறது. இதையொட்டி சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், தனியார் அமைப்புகள்பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
பெங்களூரில் தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ள நிலையில், புத்தாண்டு பிறக்கவுள்ளதால், கொண்டாட்டங்களின்போதுவன்முறைச் சம்பவங்கள் நிடந்து விடாமல் தடுக்கவும், புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் எந்தவிதப் பிரச்சினையும் ஏற்படாமல்தடுக்கும் பொருட்டு தீவிர போலீஸ் பாதுகாப்புக்கு சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தாண்டையொட்டி விடியவிடிய நடக்கும் கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க தடையில்லை. 31ம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணி முதல் நகர்முழுவதும் தீவிரப் போலீஸ் கண்காணிப்பு தொடங்கும். இதற்காக 200க்கும் மேற்பட்ட ரோந்து வாகனங்களுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள், முக்கிய இடங்களுக்கு அதிக அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் 3 பேர்போகக் கூடாது. அதி வேகமாகப் போகக் கூடாது. தாறுமாறாக ஓட்டக் கூடாது. சாலைகள், பொது இடங்களில் களியாட்டங்களில்ஈடுபடக் கூடாது.
பெண்களை சீண்டி, கை குலுக்க முயற்சிக்கக் கூடாது. சாலைகளில் செல்பவர்களை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கை குலுக்கக்கூடாது. பெண்களை சீண்டுபவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த 2,000 போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சனிக்கிழமை இரவு 3 மணி வரை தானியங்கி சிக்னல்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களைத் தடுக்கமுக்கியச் சாலைகளில் 500 போக்குவரத்து தடுப்புகள் தற்காலிகமாக அமைக்கப்படும் என்று கூறியுள்ளார் நடராஜ்.
இதற்கிடையே, நட்சத்திர ஹோட்டல்களில் இரவு 11.45 மணிக்கு மேல் பார்களைத் திறந்து வைக்கக் கூடாது என நட்ராஜ்உத்தரவிட்டிருந்தார்.
இந் நிலையில் அந்த நிபந்தனைகளை போலீசார் திடீரென தளர்த்தியுள்ளனர். சென்னை நகரில் ஸ்டார் ஹோட்டல்கள், பார்கள்,கிளப்களில் புத்தாண்டு தினத்தன்று இரவில் நடன நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications