சென்னையில் 7 இடங்களுக்கு தீவிர பாதுகாப்பு: கோவை பாஜக அலுவலகத்தில் குண்டு சோதனை
சென்னை - கோவை:
பெங்களூரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து சென்னையில் தொடர்ந்து தீவிர போலீஸ் கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி சென்னையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் எனக் கருதப்படுவதால் முக்கியஇடங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சென்னை தரமணியில் உள்ள டைடல் பார்க், கிண்டியில் உள்ள ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், மீனம்பாக்கம் விமானநிலையம், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், சென்ட்ரல் ரயில் நிலையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் ஏதாவதுஒன்றை தீவிரவாதிகள் குறி வைக்கக் கூடும் என கருதப்படுவதால் இங்கெல்லாம் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரயில், பஸ் நிலையங்களிலும் ரயில்கள், பஸ்களிலும் பயணிகளின் பைகள் தொடர்ந்து சோதனையிடப்படும். தீவிரவாதிகளைஎதிர்கொள்ளும் ஒரு போலீஸ் கமாண்டோ படை செயிண்ட் தாமஸ் மலை காவல் நிலையத்தில் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளன.
நகரில் போலீசாரின் மொபைல் பார்ட்டிகளும் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றன.
பாஜக அலுவலகத்தில் சோதனை:
இதற்கிடையே கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த மிரட்டலையடுத்துஅங்கு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
ஈரோடு ரயில்வே போலீசாரின் கையில் கிடைத்த துண்டு பிரசுரத்தில் கோவை பாஜக அலுவலகம் தகர்க்கப்படும் என்றுகூறப்பட்டிருந்தது.
இதையடுத்து கோவை மாவட்ட பாஜக அலுவலகத்துக்கு விரைந்த போலீசார் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றிவிட்டுகட்டிடம் முழுவதும் சோதனை நடத்தினர்.
மேலும் அலுவலகத்தை சுற்றி இருக்கும் மரக் கிளைகளை வெட்டவும் போலீசார் உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications