திமுக கவுன்சிலர் மீது குண்டாஸ்: ஜெ. நடவடிக்கை
சென்னை:
சென்னை எம்ஜிஆர் நகரில் புரளி கிளப்பியதாகக் கைது செய்யப்பட்ட திமுக கவுன்சிலர் தனசேகரனை தமிழக அரசு திடீரெனகுண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது.
முன்னதாக அவருக்கு சென்னை செசன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், அதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்தமனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜாமீனுக்கு திங்கள்கிழமை வரை இடைக்காலத் தடை விதித்தது.இந்த ஜாமீன் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், எம்ஜிஆர் நகர் நெரிசல் சம்பவம் குறித்து நீதிபதி ராமன்கமிஷன் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், தனசேகரனை திடீரென குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்சென்னை போலீசார்.
இது தொடர்பான உத்தரவை சென்னை மாநகர கமிஷ்னர் நட்ராஜ் பிறப்பித்துள்ளார். இப்போது சென்னை மத்தியச் சிறையில்அடைக்கப்பட்டுள்ள தனசேகரனிடம் இந்த உத்தரவு நேற்றிரவு வழங்கப்பட்டது.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் அவ்வளவு எளிதில் ஜாமீன் கோர முடியாது. இப்போது இந்த நெரிசல்சம்பவ வழக்கு எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் இருந்து சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
கருணாநிதி கடும் கண்டனம்:
தனசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை அக் கட்சியின் தலைவர் கருணாநிதி மிக வன்மையாக கண்டித்துள்ளார்.
சென்னையில் புத்தரெனும் பேரொளி என்ற நூலை கருணாநிதி வெளியிட்டுப் பேசினார். அவர் கூறுகையில்,
எம்ஜிஆர் நகரில் நடந்த நெரிசலில் சிக்கி 43 பேரும் அதற்கு முன் நடந்த நெரிசலில் சிக்கி 8 பேரும் பலியான சம்பத்துக்குக்காரணமான தமிழக அரசு பழியை திமுக கவுன்சிலர் தனசேகரன் மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்ப முயல்கிறது தமிழக அரசு.அவருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். ஆனால், தனசேகரனை இப்போது குண்டர் சட்டம் போட்டு அடைத்திருக்கிறார்கள்.
குண்டர் சட்டம் என்றால் அவர்களே வெளியே விட்டால் தான் உண்டு. பழிவாங்குவது சினத்தில் அடிப்படையில் நடப்பது.ஆத்திரமடைவது, அதற்கு குடிமக்களை ஆளாக்குவது, பிடிப்பாதவர்களையெல்லாம் பழிவாங்குவது, அவர்களைக்கொடுமைப்படுத்துவது போன்றவை எல்லாம் எந்த ஒரு ஆட்சிக்கும் நல்லதல்ல என்று, நானல்ல, திருவள்ளுவரேகுறிப்பிட்டிருக்கிறார்.
அதைப் புரிந்து இந்த அரசு நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய நிலைக்கு நாம்தள்ளப்படுவோம் என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications