ஜெயேந்திரருக்கு ஜாமீன் போட்ட திமுக விஐபி!
சென்னை:
கோவிலில் நவரத்தினக் கற்கள் திருட்டு வழக்கில் ஜெயேந்திரருக்கு ஜாமீன் கொடுத்த திருவாரூர் மாவட்டம் கோட்டூர் நகர திமுகவிவசாய அணி இணைச் செயலாளரை கட்சியிலிருந்து நீக்கி அக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,திமுக விவசாய அணி இணை செயலாளர் ராஜசேகரன் கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொண்டதாக வந்த செய்தியின்அடிப்படையில், அதை அவரே ஒத்துக் கொண்டுள்ளபடியாலும், கட்சியில் அவர் வகிக்கும் பொறுப்பிலிருந்து தற்காலிகமாகவிடுவிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட ராஜசேகரன், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் நகர விவசாய அணி இணைச் செயலாளராக இருந்து வந்தார்.கோட்டூர் அருகே உள்ள பெரியகுடி சிவன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த நவரத்தின கற்களை திருடியதாக ஜெயேந்திரர் மீதுசமீபத்தில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்தநீதிமன்றம், மன்னார்குடி நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறலாம் என உத்தரவிடப்பட்டது.
அதன்படி மன்னார்குடி நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ. 5,000 ரொக்க ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் ஜாமீன் அளிக்கவேண்டிய நிலைக்கு ஜெயேந்திரர் தள்ளப்பட்டார்.
ஆனால், போயஸ் தோட்டத்தை ஆட்டிப் படைக்கும மன்னார்குடி கும்பலுக்கு பயந்து ஜெயேந்திரருக்கு ஜாமீன் பிணையம்கொடுக்க அந்த ஊரில் யாரும் முன் வரவில்லை. இதையடுத்து அக் கும்பலை சமாளிக்க அப் பகுதி திமுகவினரின் உதவியைஜெயேந்திரர் தரப்பு நாடியது.
அந்த ஊரில் அதிமுகவை சமாளிக்கும் திறன் படைத்த திமுக விவசாய இணைச் செயலாளர் ராஜசேகரன், ஜெயேந்திரருக்கு ஜாமீன்கொடுக்க முன் வந்தார். நீதிமன்றத்தில் ஜெயேந்திரருக்காக பிணையமும் கொடுத்தார்.
இந் நிலையில் திமுக தலைமையால் கட்டம் கட்டப்பட்டுள்ளார்.
சங்கரராமன் வழக்கு ஒத்திவைப்பு:
இதற்கிடையே பாண்டிச்சேரியில் நடக்கும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர்தொடர்ந்து 3வது முறையாக நீதிமன்றத்திற்கு வராத காரணத்தால், வழக்கு ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பாண்டிச்சேரி முன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடக்கிறது. கடந்த 2 முறை இந்த வழக்கு விசாரணைக்குவந்தபோது ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியேய் மட்டும் வரவில்லை. மற்ற அனைவரும் வந்திருந்தனர்.
இந் நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றும் இரு சங்கராச்சாரியார்களும் வரவில்லை. மற்றவர்கள்ஆஜராகியிருந்தனர். இதற்கு தமிழக அரசின் வழக்கறிஞர் பாலசுந்தரம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து 3 முறை இருசங்கராச்சாரியார்களும் நீதிமன்றம் வராமல் புறக்கணித்துள்ளனர். எனவே இருவர் மீதும் பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும்என்றார்.
இதற்குப் பதிலளித்த ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் தினகரன், வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளதன் காரணமாகவே இரு சங்கராச்சாரியார்களும் வரவில்லை, அடுத்த முறை இருவரும் ஆஜராவர் என்றார்.
இதைத் தொடர்ந்து வழக்கை ஜனவரி 9ம் தேதிக்கு நீதிபதி சின்னப்பாண்டி ஒத்திவைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications