கார்த்திக்: சந்தானம் மகனின் கொலை மிரட்டல்
மதுரை:
பார்வர்ட் பிளாக் கட்சி எம்.எல்.ஏ. சந்தானம் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக, நடிகர் கார்த்திக்குக்கு ஆதரவாகசெயல்படும், பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் தினகரன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
புதுக் கட்சி தொடங்கப் போவதாக எதிர்பார்க்கப்பட்ட கார்த்திக், தற்போது அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் சேர முடிவுசெய்துள்ளார். ஆனால் மாநில பொதுச் செயலாளர் பதவி தனக்கு வழங்கப்பட்டால்தான் கட்சியில் சேருவேன் என்றும் கார்திதக்நிபந்தனை விதித்துள்ளார்.
இதனால் தற்போது பொதுச் செயலாளராக உள்ள எம்.எல்.ஏ. சந்தானம் கொதிப்படைந்துள்ளார். கார்த்திக்குக்கு பொதுச்செயலாளர் பதவி தரக் கூடாது என்று அவர் கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், அதிமுக ஜால்ராவாக மாறிவிட்ட சந்தானத்தை தலைமை கண்டுகொள்ளவில்லை. அவரைத் தூக்கிவிட்டு கார்த்திக்கைதலைமைப் பொறுப்பில் அமர்த்த அக் கட்சி முடிவு செய்துள்ளது.
இந் நிலையில் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்து வரும் தினகரன், கார்த்திக்குக்குஆதரவாக செயல்பட்டு வருவதால் அவர் மீது சந்தானம் கோபமடைந்தாகத் தெரிகிறது.இந் நிலையில் மதுரை பிச்சை பிள்ளை சாவடி பகுதியில் உள்ள தினகரனின் வீட்டுக்கு, சந்தானத்தின் மகன் இளங்கோவன்உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அப்போது தினகரன் வீட்டில் இல்லாததால், அவரது மனைவியை மிரட்டியுள்ளனர்.
மேலும், கார்த்திக்குக்கு ஆதரவாக செயல்பட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இளங்கோவனின் மனைவி மலர்விழி கரிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் அடிப்படையில்,எம்.எல்.ஏ.சந்தானம், அவரது மகன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications