இந்துவை இஸ்லாமிய முறைப்படி புதைப்பதா?: மலேசிய அமைச்சர் கண்டனம்
கோலாலம்பூர்:
இந்துவான தமிழரை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்தது நியாயமற்றது என மலேசிய அமைச்சர் கூறியுள்ளார்.
மலேசியாவில் ராணுவத்தில் கமாண்டோவாகப் பணியாற்றிய தமிழர் மூர்த்தி (வயது 36). இவரது மனைவி காளியம்மாள். கடந்தவருடம் மூர்த்தி இஸ்லாமியராக மாறினார். தனது பெயரை முகம்மது அப்துல்லா என்று மாற்றிக் கொண்டார். காளியம்மாள்தொடர்ந்து இந்துவாகவே இருந்து வந்தார்.கடந்த 7 ஆண்டுகளாக பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த கணவரை நல்லபடியாக கவனித்து வந்தார். ஆனால், உடல் நலம்மோசமாகி கடந்த 20ம் தேதி மூர்த்தி காலமானார். இதையடுத்து அவரது உடலை இந்து முறைப்படி எரிக்க காளியம்மாளின்குடும்பம் தயாரானது.
ஆனால், அவர் இஸ்லாமியராக மாறிவிட்டதால் உடலை புதைக்கத் தான் வேண்டும் என மலேசிய இஸ்லாமிய நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் கூறிவிட்டன.
மூர்த்தி இஸ்லாமியராக மாறியதற்கு எந்தவிதமான சான்றிதழும் இல்லை எனவும், அவர் மதம் மாறியதை என்னிடம் கூறியது கூடஇல்லை என்றும் காளியம்மாள் வாதிட்டத்தை நீதிமன்றங்கள் ஏற்கவில்லை.
இதையடுத்து என் கணவரின் உடலை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், ஆனால், ஆன்மா என்னிடம் தான்இருக்கும் என்று கண்ணீர் மல்கக் கூறினார் காளியம்மாள். இதைத் தொடர்ந்து இஸ்லாமிய முறைப்படி மூர்த்தியின் உடல்புதைக்கப்பட்டது.
மலேசிய நீதிமன்றங்களின் இந்தச் செயல் அந் நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாத பிற சிறுபான்மை மதத்தினருக்குஎதிரானது என கண்டனக் குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. பிற மதத்தினரின் உரிமைகளைக் பறிக்க நடக்கும் முயற்சி இது எனகுற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந் நிலையில் மலேசிய அமைச்சரான நாஸ்ரி அஜீசும் தமிழ்ப் பெண்ணுக்கு நேர்ந்த சோகத்தை கண்டித்துள்ளார். இந்துப்பெண்ணின் கணவரை, அவரது விருப்பதுக்கு எதிராக, இஸ்லாமிய முறைப்படி புதைத்தது தவறு என கருத்து தெரிவித்துள்ளார்.
மலேசிய பிரதமர் அலுவலத்துறைக்கான அமைச்சரான அஜீஸ் கூறுகையில், இது போன்ற ஒரு வழக்கு இஸ்லாமிய நீதிமன்றத்தில்விசாரிக்கப்பட்டதே தவறு. அங்கு இஸ்லாமுக்கு ஆதரவாகத் தானே தீர்ப்பு தருவார்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications