விலகினார் அத்வானி: புதிய பாஜக தலைவரானார் ராஜ்நாத் சிங்
மும்பை:
பாஜக தலைவர் பதவியில் இருந்து அத்வானி இன்று விலகினார். புதிய தலைவராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் அத்வானி தொடர்ந்து நீடிப்பார்.
மும்பையில் பாஜக வெள்ளி விழா மாநாடு நேற்று முடிவடைந்த நிலையில் இன்று தனது பதவியை அத்வானி ராஜினாமா செய்தார்.இன்று மும்பையில் நிருபர்களிடம் பேசிய அத்வானி, சென்னையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் அறிவித்ததைதப் போல எனதுபதவியை ராஜினாமா செய்துவிட்டேன்.
ராஜினாமா கடிதத்தை கட்சியின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பினேன். எனது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
கட்சியின் புதிய தலைவராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரும் திங்கள்கிழமை முறைப்படி அவர் தனது பதவியை ஏற்றுக் கொள்வார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அவர் பதவியேற்பார். ராஜ்நாத்தின் பதவிக் காலத்தில் கட்சி மேலும் பலப்படும் என்றநம்பிக்கை எனக்கு உள்ளது.
கட்சியின் மிகத் தீவிர தொண்டரான ராஜ்நாத் உத்தரப் பிரதேச முதல்வராக மிகச் சிறப்பாக நிர்வாகம் நடத்தியவர். மேலும்வாஜ்பாயின் அரசில் அமைச்சராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். கட்சித் தொண்டர்களின் ஆதரவைப் பெற்றவர்.
சமீபகாலமாக கட்சிக்கு பல வகையிலும் கெட்ட பெயர் ஏற்பட்டது. இதற்கு கொள்கைகளில் இருந்து கட்சி விலகியதும், சிலதலைவர்களின் தவறான செயல்பாடுகளுமே காரணம்.
ராஜாநாத்தின் பதவிக் காலம் 2007 பிப்ரவரி வரை நீடிக்கும். அவரது பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்ககட்சியின் தேசிய கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் நான் நீடிப்பேன்.
தீவிரவாதத்தைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைளை எடுக்கவில்லை. பெங்களூரில் நடந்துள்ள தாக்குதல்அதிர்ச்சியளிக்கிறது. தாவூத் இப்ராகிமை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வலியுறுத்தியுள்ளேன்.
ஆர்எஸ்எஸ் அனுமதியில்லாமல் பாஜக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பது போன்ற ஒரு தோற்றம்உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தோற்றத்தை உடைக்க வேண்டும் என்றார் அத்வானி.
முன்னதாக புதிய தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு மாலை அணிவித்த அத்வானி, அவருக்கு இனிப்பு ஊட்டினார்.












Click it and Unblock the Notifications