கனிமொழியின் கருத்தில் உடன்பாடில்லை: கருணாநிதி
சென்னை:
தனது மகள் கனிமொழியும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கும் இணைந்து தொடங்கியுள்ள கருத்து என்றஅமைப்பில் தனக்கு உடன்பாடில்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்து அமைப்பின் அதன் ஆரம்பமே தவறானது என்பது எனது அபிப்பிராயம் என அவர் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டி:
கருத்து அமைப்பு குறித்து எனக்கு முழுமையாகத் தெரியாது. அதன் ஆரம்பமே தவறானது என்பது எனது எண்ணம். இதைகனிமொழியிடமே தெரவித்து விட்டேன். எதை வேண்டுமானாலும் கருத்தாக தெரிவிக்கலாம் என்பதை ஏற்க முடியாது. எதையும்கருத்து என்ற பெயரில் யாரும் சொல்லி விட முடியாது.
இந்த அமைப்பினர் ஒரே விஷயத்தைத்தான் கடந்த 2 மாதமாக பேசி வருகிறார்கள். கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால்எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. அவற்றைப் பற்றியெல்லாம் பேசலாம். ஆனால் இந்த அமைப்பினர் ஒரே விஷயத்தையேபேசி வருகிறார்கள்.
கற்பை கேலிக்குரியதாக்க முடியாது. அப்படி செய்தால் அதுவே கேலிக்குரிய விஷயமாகி விடும். இந்தியாவுக்கென்று,தமிழகத்திற்கு என்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது.
பண்பாட்டை அழிப்பது போல யாரும் பேசவோ, நடக்கவோ கூடாது. கற்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொது என்றுபாரதியார் கூறியுள்ளார். அதுவே எனது கருத்தும்.
சமீப காலமாக விஜயகாந்த் நிறையப் பேசி வருகிறார். ஆனால் அவராகப் பேசவில்லை என்று நினைக்கிறேன். சமீபத்தில் அவர்என்னை அவர் சந்தித்துப் பேசினார். ஆனால் என்ன காரணத்திற்காக அவர் என்னை சந்தித்தாரோ, அதற்காக என்னைப்பார்க்கவில்லை என்று பொய் பேசியுள்ளார். இதற்கு மேல் அவரைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது?
திமுக கூட்டணியை உடைக்க என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். என்னைப் பற்றி வைகோவிடம் எதையாவதுசொல்கிறார்கள். வைகோ காதுபட என்னைப் பற்றிய தவறான செய்தியை சேர்க்கிறார்கள். ராமதாஸ் பற்றி இல்லாததும்,பொல்லாததுமாக பேசுகிறார்கள். இப்படிச் செய்தால் கூட்டணி முறிந்து விடும் என நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் தெளிவாகஇருக்கிறோம்.
முன்பெல்லாம் காவல்துறையினர் குறித்த செய்திகளாக எது வரும் என்றால் தடியடி நடத்தினார்கள், துப்பாக்கிச் சூடுநடத்தினார்கள் என்றுதான் செய்தி வரும். ஆனால் இப்போது வழிப்பறி செய்தனர், லஞ்சப் பணம் வைத்திருந்தனர், விபச்சாரவழக்கில் சிக்கினர் என்றுதான் அதிக அளவில் செய்தி வருகிறது. மக்கள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications