கிருஷ்ணசாமியை பாதுகாத்த இன்ஸ்பெக்டர் மாற்றம்
சென்னை:
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக மாற்றப்பட்டுகாத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் கல்குவாரி தகராறு தொடர்பாக மாடசாமி என்பவர் கடந்த 5ம் தேதி கொலைசெய்யப்பட்டார். கொலை நடந்த அன்றே கிருஷ்ணசாமி மீது புகார் கொடுக்கப்பட்டது.இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக கிருஷ்ணசாமி சேர்க்கப்பட்டார். போலீசார் அவரை தேடி வந்தனர். கொலை நடந்த மறுநாள்6ம் தேதி மதுரையில் இருந்து கிருஷ்ணசாமி ஜெட் விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலைய இன்ஸ்பெக்டர் குருசாமிகிருஷ்ணசாமியை வரவேற்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த கிருஷ்ணசாமி அதன்பின்னர் தலைமறைவாகிவிட்டார்.
அவரை போலீசார் தேடிவரும் நிலையில் இன்ஸ்பெக்டர் குருசாமி, கிருஷ்ணசாமியை வரவேற்று காரில் ஏற்றி அனுப்பி வைத்ததகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. குருசாமி மட்டும் கிருஷ்ணசாமியை விமான நிலையத்தில் கைது செய்திருந்தால் 25நாட்களுக்கும் மேலாக அவரை தேடும் நிலை ஏற்பட்டிருக்காது என்று கருதிய உயர் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் குருசாமி மீதுநடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.
அதன் படி இன்ஸ்பெக்டர் குருசாமி மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது விமான நிலையஇன்ஸ்பெக்டராக விஜயகுமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications