கொழும்பில் தமிழர் பகுதிகளில் வீடு வீடாக சோதனை: 903 தமிழர்கள் கைது
கொழும்பு:
விடுதலைப் புலிகளைத் தேடுவதாகக் கூறி கொழும்பில் இலங்கை ராணுவத்தினர் தமிழர்களின் இல்லங்களில் வீடு வீடாகசோதனை நடத்தி 903 ஆண், பெண்களைக் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை திடீரென ஆயிரக்கணக்கான இலங்கை ராணுவத்தினர் கொழும்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வல்லவத்தைபகுதியை சுற்றி வளைத்தனர். இந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் யாரும் வீடுகளை விட்டுவெளியில் வரக் கூடாது என்றும் அறிவித்தனர்.பின்னர் தமிழர்களின் வீடுகளுக்குள் ராணுவத்தினரும் போலீசாரும் நுழைந்தனர்.
இந்த ரெய்டில் சுமார் 2,000 இலங்கை ராணுவத்தினரும், 2,400 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டனர். துப்பாக்கிகளுடன்வீடுகளுக்குள் நுழைந்த அவர்கள் முழுமையான சோதனையில் ஈடுபட்டனர்.
சந்தேகத்துக்கிடமானவர்கள் என்று கூறி 903 தமிழின ஆண், பெண்களை கைது செய்து அப் பகுதியில் இருந்து அழைத்துச்சென்றனர்.
இது குறித்து கொழும்பு காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுரேந்திரா கூறுகையில்,
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொழும்பில் 8 மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். தேசிய அடையாளஅட்டை இல்லாத காரணத்தால் இவர்கள் பிடிபட்டனர். இவர்களது கைரேகைகள் பதிவு செய்யப்படும். இவர்கள் புகைப்படம்எடுக்கப்படுவார்கள் என்றார்.
இந்த ரெய்ட் நடந்தபோது சுமார் 7 மணி நேரம் தமிழர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வர அனுமதிக்கப்படவில்லை.
ஆனால், ஊடரங்கு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே மறுத்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications