போலிகள்: அதிமுக எம்பி மீது 3 வழக்குகள்
Subscribe to Oneindia Tamil
மன்னார்குடி:
போலி வாக்காளர் சேர்க்கை தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளரும், எம்பியுமான காம்ராஜ் மீது 3 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.கத்தை கத்தையாக போலி வாக்காளர் விண்ணப்பங்கள் கொடுத்தது தொடர்பாக பல்வேறு இடங்களில் அதிமுக, திமுகவினர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மன்னார்குடி, நீடாமங்கலம், ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஆகிய பகுதிகளில் போலி வாக்காளர்களைச் சேர்த்தமொத்தமான பலநூறு விண்ணப்பங்களை மாவட்ட அதிமுக செயலாளர் காம்ராஜ் எம்பி வழங்கியிருந்தார்.
இந்த விண்ணப்பங்கள் போலியானவை என கண்டறியப்பட்டு மன்னார்குடி ஆர்டிஓ தங்கராசு, காம்ராஜ் எம்பி மீது 3 தனிவழக்குகளை மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மாஜிஸ்திரேட் முரளிதரன் அவ் வழக்குகளைவிசாரணைக்கு ஏற்றார்.












Click it and Unblock the Notifications