யுஏஇயில் தவித்த 35 தமிழர்கள் தாயகம் திரும்பினர்!
சென்னை:
ஐக்கிய அரபு எமிரேட்டில் சிக்கித் தவித்த 35 தமிழக இளைஞர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தாயகம் திரும்பியுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் ஒரு ஹோட்டலில் தமிழகத்தைச் சேர்ந்த 39 இளைஞர்கள் வேலை பார்த்து வந்தனர். இந் நிலையில்அந்த ஹோட்டல் திவால் ஆகி விட்டதால், வேறு ஒரு இடத்தில் பணியில் சேர்ந்தனர். ஆனால் அங்கு அவர்களுக்கு சரியானஊதியம் வழங்கப்படவில்லை, அவர்களது பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.இதனால் தாயகம் திரும்ப முடிவு செய்த அவர்களை தாயகம் திரும்ப விடாமல் எமிரேட் அதிகாரிகள் தொல்லை கொடுத்தனர்.இதனால் 39 பேரும் பல்வேறு அவதிகளுக்கு ஆளாகினர்.
இவர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்குகடிதம் எழுதியிருந்தார்.
இந் நிலையில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் இ.அகமது முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் சிக்கிக் தவித்த சம்பந்தப்பட்ட 39 பேரும் உரிய காலத்திற்குப் பிறகும் அங்கு தங்கியதால்தான் பெரும் அவதிக்குள்ளாக நேரிட்டது.
அவர்களை மீட்க அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்துசம்பந்தப்பட்ட அனைவருக்கும் விதிக்கப்பட்ட அபராதத் தொகை குறைக்கப்பட்டு அவர்கள் தாயகம் திரும்ப அனுமதிக்க ஐக்கியஅரபு எமிரேட் அரசு ஒத்துக் கொண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தற்போது முதல் கட்டமாக 35 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். ஒருவர் அங்கேயே தங்கி தொடர்ந்து வேலைசெய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 3 பேரும் விரைவில் தாயகம் திரும்புவர் என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications