கடலூர்:புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் போலீஸ் தடியடி: வாலிபர் சாவு
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூரில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் வாலிபர் ஒருவர் கிணற்றில்தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.கடலூர் சண்முகம் தெருவில் வசித்து வந்தவர் வெங்கடேஷ். இவரும், இதே பகுதியைச் சேர்ந்த பலரும், அப்பகுதியில் நேற்றுநள்ளிரவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் அங்கு வந்துள்ளனர்.
நடுச் சாலையில் புத்தாண்டைக் கொண்டாடக் கூடாது என்று கூறி தடியடியில் இறங்கினர். இதில் பயந்து போன இளைஞர்கள்அங்கிருந்து ஓடியுள்ளனர். இதில் வெங்கடேஷ் அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் அடிபட்டுவெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார்.
இதனால் ஆத்திரமுற்ற அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், வெங்கடேஷின் உடலை கடலூர்-பண்ருட்டி சாலையில் போட்டு மறியலில்இறங்கினர். உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications